• Nov 14 2024

மதுபானம் அருந்திய இருவர் மரணம் - உயிருக்கு போராடும் மேலும் இருவர்

Chithra / Nov 12th 2024, 12:13 pm
image

 

காலி, பிட்டிகல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு பிட்டிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரக்கொடை பகுதியில் வசிக்கும் பத்மகுமார என்ற நபரே தனது வீட்டிற்கு சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபான போத்தல் ஒன்றை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த மதுபானத்தை தனது நண்பர்களும் சேர்ந்து அருந்தியுள்ளனர்.

நேற்று காலை வேளையில் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் உடனடியாக எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் 76 வயதான ஹரிசன் விஜேரத்ன மற்றும் 60 வயதான தர்மபால ஆகிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருவரும் அதே பகுதியில் வசிப்பவர்கள் எனவும் விவசாயம் மற்றும் சாரதிகளாக தொழில் செய்து வருவதும்  விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுபான போத்தலை கொண்டு வந்த நபரும் மற்றைய நபரும் எல்பிட்டிய மற்றும் கராப்பிட்டிய வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பிட்டிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுபானம் அருந்திய இருவர் மரணம் - உயிருக்கு போராடும் மேலும் இருவர்  காலி, பிட்டிகல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று முன்தினம் இரவு பிட்டிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரக்கொடை பகுதியில் வசிக்கும் பத்மகுமார என்ற நபரே தனது வீட்டிற்கு சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபான போத்தல் ஒன்றை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அந்த மதுபானத்தை தனது நண்பர்களும் சேர்ந்து அருந்தியுள்ளனர்.நேற்று காலை வேளையில் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் உடனடியாக எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.எனினும் 76 வயதான ஹரிசன் விஜேரத்ன மற்றும் 60 வயதான தர்மபால ஆகிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.இருவரும் அதே பகுதியில் வசிப்பவர்கள் எனவும் விவசாயம் மற்றும் சாரதிகளாக தொழில் செய்து வருவதும்  விசாரணையில் தெரியவந்துள்ளது.மதுபான போத்தலை கொண்டு வந்த நபரும் மற்றைய நபரும் எல்பிட்டிய மற்றும் கராப்பிட்டிய வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பிட்டிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement