• Dec 09 2024

கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொலை; சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Chithra / Aug 20th 2024, 1:09 pm
image

 

சுரேந்திர வசந்த பெரேரா என அழைக்கப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொலை செய்து மேலும் நால்வரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேககநபர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய பெண் உட்பட 11 சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இன்று (20) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் பிரபல பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொலை; சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு  சுரேந்திர வசந்த பெரேரா என அழைக்கப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொலை செய்து மேலும் நால்வரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேககநபர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.இதன்படி நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய பெண் உட்பட 11 சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.சந்தேகநபர்கள் இன்று (20) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் பிரபல பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement