• Sep 17 2024

விஷ வாயு கசிந்ததில் பறிபோன இரு உயிர்கள்; கொழும்பு புறநகர் பகுதியில் சம்பவம்

Chithra / Aug 14th 2024, 8:02 am
image

Advertisement


கொழும்பு  - மாலம்பே, கஹந்தோட்டை வீதி, ஜெயந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றினுள் விஷ வாயு கசிந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக மாலம்பே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 65 மற்றும் 43 வயதான இரண்டு பேரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இருவரினதும் சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இரசாயன வகைகளை கலந்த போது வாயு கசிந்து, இதனால் சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

என்ன வகையான விஷ வாயு என்பது குறித்து இன்னமும் கண்டறியப்படவில்லை.

வீட்டில் விஷ வாயு பரவியிருப்பதனால் விசாரணைகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் நுகேகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.   

விஷ வாயு கசிந்ததில் பறிபோன இரு உயிர்கள்; கொழும்பு புறநகர் பகுதியில் சம்பவம் கொழும்பு  - மாலம்பே, கஹந்தோட்டை வீதி, ஜெயந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றினுள் விஷ வாயு கசிந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக மாலம்பே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.இதன்போது, 65 மற்றும் 43 வயதான இரண்டு பேரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த இருவரினதும் சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.இரசாயன வகைகளை கலந்த போது வாயு கசிந்து, இதனால் சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.என்ன வகையான விஷ வாயு என்பது குறித்து இன்னமும் கண்டறியப்படவில்லை.வீட்டில் விஷ வாயு பரவியிருப்பதனால் விசாரணைகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் நுகேகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.   

Advertisement

Advertisement

Advertisement