• Nov 22 2024

எச்சரிக்கையும் மீறி கடலுக்கு சென்ற இருவருக்கு நேர்ந்த துயரம்..!

Chithra / May 28th 2024, 7:34 am
image



எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்களை காணவில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்குப் பருவமழை காரணமாக இலங்கை மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையையும் மீறி குறித்த மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அதிக காற்று வீசி வருவதைக் கருத்தில் கொண்டு இன்றும் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்தும் காணப்படும். 

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரியின் கரகல பிரதேசத்தில் அதிகளவான மழை பதிவாகியுள்ள நிலையில், அது 143.3 மி.மீ மழைவீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கையும் மீறி கடலுக்கு சென்ற இருவருக்கு நேர்ந்த துயரம். எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்களை காணவில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை காரணமாக இலங்கை மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையையும் மீறி குறித்த மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, அதிக காற்று வீசி வருவதைக் கருத்தில் கொண்டு இன்றும் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்தும் காணப்படும். எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரியின் கரகல பிரதேசத்தில் அதிகளவான மழை பதிவாகியுள்ள நிலையில், அது 143.3 மி.மீ மழைவீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.இதேவேளை, 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement