• Dec 27 2024

வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் அத்துமீறி நுழைந்த இருவரால் பதற்றம்

Chithra / Dec 24th 2024, 7:56 am
image


வைத்திய அத்தியட்சகரின் உரிய அனுமதியின்றி வைத்தியசாலையில் அத்துமீறி உட்பிரவேசித்த இருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வளாகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த வைத்தியசாலையில் இருவர் அனுமதியின்றி உட்பிரவேசித்ததாக அங்கு பாதுகாப்பு பணிக்கு பொறுப்பான அதிகாரியினால் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில்  நேற்று (23) மாலை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய குறித்த இருவரையும் கைது செய்த கல்முனை தலைமையக பொலிஸார்  தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைதானவர்கள் கல்முனை மாநகரில் உள்ள பிரபல ஆடையகம் ஒன்றின்  பணியாளர்கள் என்பதுடன்   குறித்த வைத்தியசாலை பணிப்பாளரின்  முன் அனுமதி இன்றி  சுத்தியலுடன்  வைத்தியசாலைக்குள்   பிரவேசித்து  குறித்த வைத்தியசாலையில்  சந்தேகத்திற்கு இடமாக நடமாடி,

முரண்பாடான கருத்துக்களை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் தெரிவித்துள்ளதாக விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.  

எனினும் கைதானவர்கள் வழமை போன்று தாங்கள் புதிய ஆண்டிற்கான  கலண்டர்களை அரச தனியார் திணைக்களங்களுக்கு கொழுவி அடிப்பதற்கு சென்றதாகவும் அதன் போது இவ்வாறான நிலைமை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் குறித்த வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி வைத்தியர் குணசிங்கம் சுகுணன் உள்ளக விசாரணை ஒன்றினை மேற்கொண்டுள்ளதுடன்,

கல்முனை பிராந்திய  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  ரீ. எச். டி .எம். எல். புத்திகவின்   வழிகாட்டலில் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்   தலைமையில் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் அத்துமீறி நுழைந்த இருவரால் பதற்றம் வைத்திய அத்தியட்சகரின் உரிய அனுமதியின்றி வைத்தியசாலையில் அத்துமீறி உட்பிரவேசித்த இருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வளாகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.இதன்போது குறித்த வைத்தியசாலையில் இருவர் அனுமதியின்றி உட்பிரவேசித்ததாக அங்கு பாதுகாப்பு பணிக்கு பொறுப்பான அதிகாரியினால் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில்  நேற்று (23) மாலை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.குறித்த முறைப்பாட்டிற்கமைய குறித்த இருவரையும் கைது செய்த கல்முனை தலைமையக பொலிஸார்  தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் கைதானவர்கள் கல்முனை மாநகரில் உள்ள பிரபல ஆடையகம் ஒன்றின்  பணியாளர்கள் என்பதுடன்   குறித்த வைத்தியசாலை பணிப்பாளரின்  முன் அனுமதி இன்றி  சுத்தியலுடன்  வைத்தியசாலைக்குள்   பிரவேசித்து  குறித்த வைத்தியசாலையில்  சந்தேகத்திற்கு இடமாக நடமாடி,முரண்பாடான கருத்துக்களை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் தெரிவித்துள்ளதாக விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.  எனினும் கைதானவர்கள் வழமை போன்று தாங்கள் புதிய ஆண்டிற்கான  கலண்டர்களை அரச தனியார் திணைக்களங்களுக்கு கொழுவி அடிப்பதற்கு சென்றதாகவும் அதன் போது இவ்வாறான நிலைமை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.இவ்விடயம் தொடர்பில் குறித்த வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி வைத்தியர் குணசிங்கம் சுகுணன் உள்ளக விசாரணை ஒன்றினை மேற்கொண்டுள்ளதுடன்,கல்முனை பிராந்திய  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  ரீ. எச். டி .எம். எல். புத்திகவின்   வழிகாட்டலில் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்   தலைமையில் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement