• Apr 15 2026

கஞ்சா போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு உட்பட இருவர் கைது!!

Chithra / Jan 27th 2026, 11:28 am
image


திருகோணமலை கோமரன்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திகடுவ பகுதியில் நேற்று மாலை கஞ்சா வைத்திருந்த பௌத்த பிக்கு உட்பட இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பௌத்த பிக்குவிடம் இருந்து 1520 மில்லிகிராம் கஞ்சாவும், சிவில் பாதுகாப்பு படையினரின் வசம் இருந்து 540 கிராம் கஞ்சாவும் பொலிஸார் மீட்டுள்ளனர்.


பௌத்த பிக்கு புலிகண்டி குளம் பகுதியில் உள்ள விகாரையில் வசித்து வருவதாகவும் சிவில் பாதுகாப்பு படை அதிகாரி மதவாச்சி சிவில் பாதுகாப்பு படை திணைக்கள அலுவலகத்தில் கடமையாற்றி வருபவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


சந்தேக நபர்கள் கஞ்சாவுடன் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கஞ்சா போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு உட்பட இருவர் கைது திருகோணமலை கோமரன்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திகடுவ பகுதியில் நேற்று மாலை கஞ்சா வைத்திருந்த பௌத்த பிக்கு உட்பட இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பௌத்த பிக்குவிடம் இருந்து 1520 மில்லிகிராம் கஞ்சாவும், சிவில் பாதுகாப்பு படையினரின் வசம் இருந்து 540 கிராம் கஞ்சாவும் பொலிஸார் மீட்டுள்ளனர்.பௌத்த பிக்கு புலிகண்டி குளம் பகுதியில் உள்ள விகாரையில் வசித்து வருவதாகவும் சிவில் பாதுகாப்பு படை அதிகாரி மதவாச்சி சிவில் பாதுகாப்பு படை திணைக்கள அலுவலகத்தில் கடமையாற்றி வருபவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்கள் கஞ்சாவுடன் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement