திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் தீயணைப்பு உதவியாளர் ஆகியோர் இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவின் விசாரணை அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
திருகோணமலை பிரதான வீதியில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் குறித்து ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக இரண்டு சந்தேகநபர்களும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு, திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 20 ஆயிரம் ரூபாவே இலஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது.
ரூபா 20 ஆயிரம் இலஞ்சம் பெற்ற திருகோணமலை தீயணைப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உட்பட இருவர் கைது திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் தீயணைப்பு உதவியாளர் ஆகியோர் இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவின் விசாரணை அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.திருகோணமலை பிரதான வீதியில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் குறித்து ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக இரண்டு சந்தேகநபர்களும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு, திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.சம்பவம் தொடர்பாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 20 ஆயிரம் ரூபாவே இலஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது.