• Apr 17 2026

ஈரான் உச்ச தலைவரின் புதிய சபதம்!

Ziya / Mar 13th 2026, 5:07 pm
image

"ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் பழிவாங்குவோம்!" - வளைகுடா நாடுகளுக்குப் பகிரங்க எச்சரிக்கை


"எங்கள் தியாகிகளின் இரத்தத்திற்காகப் பழிவாங்குவதை ஒரு போதும் கைவிட மாட்டோம்" ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமெனியின் இந்த ஆக்ரோஷமான வார்த்தைகள் இப்போது மத்திய கிழக்கை அதிர  வைத்துள்ளன.


ஹார்முஸ் ஜலசந்தி மூடல், வளைகுடா நாடுகளுக்கான இறுதி எச்சரிக்கை எனப் போர் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது. 


மறைந்த ஈரானியத் தலைவர்களின் தியாகத்தைப் போற்றிய மொஜ்தபா காமெனி, ஈரானிய மக்களின் உறுதிப்பாடு எதிரிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.


 "எங்கள் மனதில் உள்ள பழிவாங்கல் என்பது ஒரு தலைவருக்கானது மட்டுமல்ல; எதிரியால் கொல்லப்பட்ட நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்காகவும் நாங்கள் பழிவாங்குவோம்" எனச் சூளுரைத்தார்.


உலகப் பொருளாதாரத்தையே முடக்கும் ஆயுதத்தை ஈரான் இப்போது கையில் எடுத்துள்ளது.


அதாவது உலக எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது.


"இந்த முடக்கத்தால் கிடைக்கும் பலன்களைத் தொடர்ந்து பயன்படுத்துவோம்" என மொஜ்தபா  காமெனி அதிரடியாக அறிவித்துள்ளார். 


"எங்கள் நாட்டைத் தாக்க உதவும் தளங்களை உடனே மூடுங்கள். அமெரிக்கா உங்களுக்குப் பாதுகாப்பைத் தரும் என்பது ஒரு பொய்" எனத் தெரிவித்த அவர், அண்டை நாடுகளுடன் சுமூக உறவு கொள்ளத் தயாராக இருந்தாலும், துரோகத்தை மன்னிக்க முடியாது எனத் தெளிவாகக் கூறினார்.


ஈரான் உச்ச தலைவரின் புதிய சபதம் "ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் பழிவாங்குவோம்" - வளைகுடா நாடுகளுக்குப் பகிரங்க எச்சரிக்கை"எங்கள் தியாகிகளின் இரத்தத்திற்காகப் பழிவாங்குவதை ஒரு போதும் கைவிட மாட்டோம்" ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமெனியின் இந்த ஆக்ரோஷமான வார்த்தைகள் இப்போது மத்திய கிழக்கை அதிர  வைத்துள்ளன.ஹார்முஸ் ஜலசந்தி மூடல், வளைகுடா நாடுகளுக்கான இறுதி எச்சரிக்கை எனப் போர் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது. மறைந்த ஈரானியத் தலைவர்களின் தியாகத்தைப் போற்றிய மொஜ்தபா காமெனி, ஈரானிய மக்களின் உறுதிப்பாடு எதிரிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளதாகத் தெரிவித்தார். "எங்கள் மனதில் உள்ள பழிவாங்கல் என்பது ஒரு தலைவருக்கானது மட்டுமல்ல; எதிரியால் கொல்லப்பட்ட நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்காகவும் நாங்கள் பழிவாங்குவோம்" எனச் சூளுரைத்தார்.உலகப் பொருளாதாரத்தையே முடக்கும் ஆயுதத்தை ஈரான் இப்போது கையில் எடுத்துள்ளது.அதாவது உலக எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது."இந்த முடக்கத்தால் கிடைக்கும் பலன்களைத் தொடர்ந்து பயன்படுத்துவோம்" என மொஜ்தபா  காமெனி அதிரடியாக அறிவித்துள்ளார். "எங்கள் நாட்டைத் தாக்க உதவும் தளங்களை உடனே மூடுங்கள். அமெரிக்கா உங்களுக்குப் பாதுகாப்பைத் தரும் என்பது ஒரு பொய்" எனத் தெரிவித்த அவர், அண்டை நாடுகளுடன் சுமூக உறவு கொள்ளத் தயாராக இருந்தாலும், துரோகத்தை மன்னிக்க முடியாது எனத் தெளிவாகக் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement