• May 16 2026

போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய இருவர் மீது வாள்வெட்டு!

shanu / Dec 22nd 2025, 1:35 pm
image

 

சட்டவிரோத கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு  தகவல் வழங்கிய இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இந்த சம்பவம் மட்டக்களப்பு மாங்கேணி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது. 


சட்டவிரோதமாக கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் தொடர்பில் இருவர் வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 


இதனையடுத்து,  நேற்று மாங்கேணி பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்ற 15 பேர் கொண்ட குழு வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதன் பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


சம்பவத்தில் செல்வபுரம் மாங்கேணி சேர்ந்த  40 வயதுடைய ஒருவரும்,  அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரும் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி மட்டு. போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய  தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களை கைது செய்ய வாகரை பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். 

போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய இருவர் மீது வாள்வெட்டு  சட்டவிரோத கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு  தகவல் வழங்கிய இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மட்டக்களப்பு மாங்கேணி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் தொடர்பில் இருவர் வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து,  நேற்று மாங்கேணி பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்ற 15 பேர் கொண்ட குழு வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதன் பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் செல்வபுரம் மாங்கேணி சேர்ந்த  40 வயதுடைய ஒருவரும்,  அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரும் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி மட்டு. போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய  தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களை கைது செய்ய வாகரை பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement