• Oct 14 2026

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையான இரு முக்கிய அரசியல் பிரமுகர்கள்!

Chithra / Oct 12th 2026, 10:56 am
image


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் இன்று (12) இஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளனர்.  


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, தற்போது இடம்பெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.  


அதேவேளை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.


முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.   

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையான இரு முக்கிய அரசியல் பிரமுகர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் இன்று (12) இஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளனர்.  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, தற்போது இடம்பெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.  அதேவேளை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.   

Advertisement

Advertisement

Advertisement