• Mar 07 2026

ஊர்காவற்துறையில் இரு கடைகளுக்கு சீல் வைப்பு! 235,000 ரூபா தண்டம்

Chithra / Jan 27th 2026, 8:28 am
image


யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் சுகாதார குறைபாடுகளுடன் இயங்கிய இரு கடைகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டதுடன் சீல் வைத்து மூடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. 


ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் ஊர்காவற்துறை பொது சுகாதார பரிசோதகர் ரா. சானுஜன் மற்றும் வேலணை பொது சுகாதார பரிசோதகர் சீ. வி. கிசோக்குமார் ஆகியோரடங்கிய குழுவினரால் கடைகள் 22ம் திகதி பரிசோதனை செய்யப்பட்டது.


இதன்போது இருகடைகளில் சுகாதாரமற்ற முறையில் களஞ்சியபடுத்தப்பட்ட திகதி காலாவதியான மற்றும் மனித பாவனைக்கு உகந்ததல்லாத பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டது.


இதனையடுத்து இரு கடை உரிமையாளர்களிற்கும் எதிராக தனித்தனியாக 34 மற்றும் 13 குற்றச்சாட்டுகளுடன் நேற்று ஊர்காவற்துறை பொது சுகாதார பரிசோதகர் ரா. சானுஜனால் ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.


வழக்குகளை விசாரித்த ஊர்காவற்துறை நீதவான் இரு கடை உரிமையாளர்களையும் குற்றவாளிகளாக இனங்கண்டு முறையே 170,000 ரூபா மற்றும் 65,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.


அத்துடன் சுகாதார குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு பொது சுகாதார பரிசோதகரின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரை இரு கடைகளையும் சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு கட்டளை இட்டார். 


இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகரால் இரு கடைகளும் சீல் வைத்து மூடப்பட்டது.


ஊர்காவற்துறையில் இரு கடைகளுக்கு சீல் வைப்பு 235,000 ரூபா தண்டம் யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் சுகாதார குறைபாடுகளுடன் இயங்கிய இரு கடைகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டதுடன் சீல் வைத்து மூடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் ஊர்காவற்துறை பொது சுகாதார பரிசோதகர் ரா. சானுஜன் மற்றும் வேலணை பொது சுகாதார பரிசோதகர் சீ. வி. கிசோக்குமார் ஆகியோரடங்கிய குழுவினரால் கடைகள் 22ம் திகதி பரிசோதனை செய்யப்பட்டது.இதன்போது இருகடைகளில் சுகாதாரமற்ற முறையில் களஞ்சியபடுத்தப்பட்ட திகதி காலாவதியான மற்றும் மனித பாவனைக்கு உகந்ததல்லாத பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டது.இதனையடுத்து இரு கடை உரிமையாளர்களிற்கும் எதிராக தனித்தனியாக 34 மற்றும் 13 குற்றச்சாட்டுகளுடன் நேற்று ஊர்காவற்துறை பொது சுகாதார பரிசோதகர் ரா. சானுஜனால் ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.வழக்குகளை விசாரித்த ஊர்காவற்துறை நீதவான் இரு கடை உரிமையாளர்களையும் குற்றவாளிகளாக இனங்கண்டு முறையே 170,000 ரூபா மற்றும் 65,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.அத்துடன் சுகாதார குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு பொது சுகாதார பரிசோதகரின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரை இரு கடைகளையும் சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு கட்டளை இட்டார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகரால் இரு கடைகளும் சீல் வைத்து மூடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement