• Dec 09 2024

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த துயரம் - நீரில் மூழ்கி இருவர் சாவு..!

Chithra / Jun 26th 2024, 11:13 am
image

இலங்கைக்கு சுற்றுலா வந்த நிலையில் உனவடுன கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

61 வயதான மலேசிய நாட்டைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்தவராவார்.

இந்த வெளிநாட்டவர் நேற்று (25) மாலை நீராடச் சென்ற வேளை நீரோட்டத்தில் சிக்கியுள்ளதாக ஹபராதுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகளின் தலையீட்டினால் மீட்கப்பட்டு காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதேவேளை, வெலிகந்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட அசேலபுர பிரதேசத்தில் உள்ள கால்வாயில் குளிப்பதற்குச் சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நேற்று (25) இரவு நீராடச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

வெலிகந்த, அசேலபுர பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த துயரம் - நீரில் மூழ்கி இருவர் சாவு. இலங்கைக்கு சுற்றுலா வந்த நிலையில் உனவடுன கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.61 வயதான மலேசிய நாட்டைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்தவராவார்.இந்த வெளிநாட்டவர் நேற்று (25) மாலை நீராடச் சென்ற வேளை நீரோட்டத்தில் சிக்கியுள்ளதாக ஹபராதுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.பிரதேசவாசிகளின் தலையீட்டினால் மீட்கப்பட்டு காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதேவேளை, வெலிகந்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட அசேலபுர பிரதேசத்தில் உள்ள கால்வாயில் குளிப்பதற்குச் சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் நேற்று (25) இரவு நீராடச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.வெலிகந்த, அசேலபுர பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement