• Jan 09 2025

காதல் உறவால் வந்த விபரீதம் - 16 வயது மாணவியை மிரட்டிய இரு மாணவர்கள் சிக்கினர்

Chithra / Dec 30th 2024, 2:39 pm
image


தகாத (நிர்வாண) காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாகக் கூறி மாணவி ஒருவரை மிரட்டியதாகக் கூறப்படும் இரு மாணவர்கள் கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக நாகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

காலி - நாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய இரு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் 13 வயதுடைய மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரான மாணவன் குறித்த மாணவியுடன் தனது தொலைபேசியில் பல தடவைகள் காணொளி அழைப்பில் தொடர்பு கொண்டுள்ள நிலையில், மாணவியை தவறான முறையில் காணொளி எடுத்துள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபரான மாணவன் மற்றுமொரு மாணவனுடன் இணைந்து குறித்த மாணவியிடம், காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாகக் கூறி, பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய முயன்றுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

காதல் உறவால் வந்த விபரீதம் - 16 வயது மாணவியை மிரட்டிய இரு மாணவர்கள் சிக்கினர் தகாத (நிர்வாண) காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாகக் கூறி மாணவி ஒருவரை மிரட்டியதாகக் கூறப்படும் இரு மாணவர்கள் கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக நாகொடை பொலிஸார் தெரிவித்தனர்.காலி - நாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய இரு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் 13 வயதுடைய மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.இதன்போது, சந்தேகநபரான மாணவன் குறித்த மாணவியுடன் தனது தொலைபேசியில் பல தடவைகள் காணொளி அழைப்பில் தொடர்பு கொண்டுள்ள நிலையில், மாணவியை தவறான முறையில் காணொளி எடுத்துள்ளார்.இதனையடுத்து, சந்தேகநபரான மாணவன் மற்றுமொரு மாணவனுடன் இணைந்து குறித்த மாணவியிடம், காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாகக் கூறி, பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய முயன்றுள்ளார்.இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement