யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பிற்கு சொகுசு வாகனத்தில் கேரளா கஞ்சா கடத்திய சந்தேகநபர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், தேராவில் தேக்கங்காடு பகுதியில் புதுக்குடியிருப்பு போக்குவரத்து பொலிஸாரின் உதவியுடன் குறித்த வாகனத்தை மறித்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது குறித்த வாகனத்தில் 6 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெகனார் வாகனத்தையும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் கஞ்சாவையும், வெகனார் வாகனத்தையும் பொலிஸார் முற்படுத்தப்படவுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு வாகனத்தில் கேரளா கஞ்சா கடத்திய ஒருவர் கைது யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பிற்கு சொகுசு வாகனத்தில் கேரளா கஞ்சா கடத்திய சந்தேகநபர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், தேராவில் தேக்கங்காடு பகுதியில் புதுக்குடியிருப்பு போக்குவரத்து பொலிஸாரின் உதவியுடன் குறித்த வாகனத்தை மறித்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது குறித்த வாகனத்தில் 6 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெகனார் வாகனத்தையும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் கஞ்சாவையும், வெகனார் வாகனத்தையும் பொலிஸார் முற்படுத்தப்படவுள்ளனர்.