• Apr 02 2025

நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு பெண்கள் - கடும் முயற்சியால் மீட்பு!

Chithra / Sep 15th 2024, 12:28 pm
image

 

நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போவதென்ன நீர்த்தேக்கத்தில் வான்கதவு திறக்கப்பட்டதன் காரணமாக அம்பன் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், மொரகொல்ல பிரதேசத்தில் நீராடிக்கொண்டிருந்த இரு பெண்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளது.

நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரு பெண்களும் கொங்கஹவெல மற்றும் காகம பிரதேசங்களை சேர்ந்த 20 மற்றும் 25 வயதுகளை உடையவர்களாவர்.

நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரு பெண்களும் தம்புள்ளை பொலிஸ் உயிர்காப்புப் படையினரின் கடும் முயற்சியால் மீட்கப்பட்டு, முதலுதவி வழங்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு பெண்கள் - கடும் முயற்சியால் மீட்பு  நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போவதென்ன நீர்த்தேக்கத்தில் வான்கதவு திறக்கப்பட்டதன் காரணமாக அம்பன் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், மொரகொல்ல பிரதேசத்தில் நீராடிக்கொண்டிருந்த இரு பெண்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளது.நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரு பெண்களும் கொங்கஹவெல மற்றும் காகம பிரதேசங்களை சேர்ந்த 20 மற்றும் 25 வயதுகளை உடையவர்களாவர்.நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரு பெண்களும் தம்புள்ளை பொலிஸ் உயிர்காப்புப் படையினரின் கடும் முயற்சியால் மீட்கப்பட்டு, முதலுதவி வழங்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement