அரச மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 530 கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான தகவலை அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம வழங்கியுள்ளார்.
மேலும் அவர், பொதுவாக, "அங்கீகரிக்கப்பட்ட கதிரியக்க நிபுணர்களாக 1,150 பணியாளர்கள் இருக்க வேண்டும், ஆனால் தற்போது கிட்டத்தட்ட 620 பேர் பணி புரிகின்றனர்.
2 ஆண்டுகளுக்கும் மேலாக கதிரியக்க நிபுணர்கள் பணியமர்த்தப்படாததால், நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் 80க்கும் மேற்பட்ட கதிரியக்க நிபுணர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்" என சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச மருத்துவமனைகளில் இரு வருடங்களாக நிலவும் கதிரியக்க வல்லுநர்கள் பற்றாக்குறை அரச மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 530 கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பிலான தகவலை அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம வழங்கியுள்ளார்.மேலும் அவர், பொதுவாக, "அங்கீகரிக்கப்பட்ட கதிரியக்க நிபுணர்களாக 1,150 பணியாளர்கள் இருக்க வேண்டும், ஆனால் தற்போது கிட்டத்தட்ட 620 பேர் பணி புரிகின்றனர்.2 ஆண்டுகளுக்கும் மேலாக கதிரியக்க நிபுணர்கள் பணியமர்த்தப்படாததால், நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.அதேவேளை, கடந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் 80க்கும் மேற்பட்ட கதிரியக்க நிபுணர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்" என சுட்டிக்காட்டியுள்ளார்.