• Apr 15 2026

சுன்னாகத்தில் போதைப்பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது!

Chithra / Feb 7th 2026, 10:20 pm
image


யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வெவ்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு போதைப் பொருட்களுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மயிலணி பகுதியில் வைத்து 10 கிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவருக்கு எதிராக ஏற்கனவே மல்லாகம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மயிலங்காடு பகுதியில் வைத்து 100 போதை மாத்திரைகளுடன் 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவருக்கு எதிராகவும் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுன்னாகத்தில் போதைப்பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வெவ்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு போதைப் பொருட்களுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதன்போது மயிலணி பகுதியில் வைத்து 10 கிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக ஏற்கனவே மல்லாகம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை மயிலங்காடு பகுதியில் வைத்து 100 போதை மாத்திரைகளுடன் 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராகவும் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement