அபுதாபியில் உள்ள ஐக்கிய அமீரகத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்ட இந்து கோவிலை பிரதமர் மோடி நேற்றையதினம்(14) திறந்து வைத்தார்.
இந்திய பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டார்.
அதன்போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளை ஏற்று அபுதாபியில் இந்துகோவில் கட்டுவதற்கு அமீரக அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து துபாய் அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முரைக்கா பகுதியில் இந்து கோவில் கட்ட 55 ஆயிரம் சதுர அடி இடம் அபுதாபி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது.
கோயிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 2018ம் ஆண்டு இடம்பெற்றது. இதன்போது இந்திய பிரதமர் மோடி துபாயில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், குறித்த இந்து கோவிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
2 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைத்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயில் திறந்துவைப்பு. பிரதமர் மோடியும் பங்கேற்பு. அபுதாபியில் உள்ள ஐக்கிய அமீரகத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்ட இந்து கோவிலை பிரதமர் மோடி நேற்றையதினம்(14) திறந்து வைத்தார். இந்திய பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டார். அதன்போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளை ஏற்று அபுதாபியில் இந்துகோவில் கட்டுவதற்கு அமீரக அரசு அனுமதி அளித்தது.இதையடுத்து துபாய் அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முரைக்கா பகுதியில் இந்து கோவில் கட்ட 55 ஆயிரம் சதுர அடி இடம் அபுதாபி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. கோயிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 2018ம் ஆண்டு இடம்பெற்றது. இதன்போது இந்திய பிரதமர் மோடி துபாயில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார்.இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், குறித்த இந்து கோவிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.2 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைத்தார்.