• May 19 2026

இருநூறு ஆண்டுகளை பூர்த்தி செய்த உடுவில் மகளிர் கல்லூரி...!samugammedia

Ziya / Feb 6th 2024, 12:53 pm
image

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொண்டாட்ட நிகழ்வுகள் இன்றையதினம்(06)  பாடசாலையில் இடம்பெற்றது.

கல்லூரி மண்டபத்தில் இன்று(06) காலை 8 மணியளவில் கல்லூரியின் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில். பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் கலந்து கொண்டார்.

இதன்போது, இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டதுடன், இரண்டு இலட்சினைகள், பாடல் என்பனவும் வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தென்னிந்திய திருச்சபை பேராயர் கலாநிதி வே.பத்மதாயாளன், தென்னிந்திய திருச்சபை முன்னாள் பேராயர் ஜெபநேசன், கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள், பழைய மாணவிகள், பெற்றோர் ,நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



இருநூறு ஆண்டுகளை பூர்த்தி செய்த உடுவில் மகளிர் கல்லூரி.samugammedia யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொண்டாட்ட நிகழ்வுகள் இன்றையதினம்(06)  பாடசாலையில் இடம்பெற்றது.கல்லூரி மண்டபத்தில் இன்று(06) காலை 8 மணியளவில் கல்லூரியின் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில். பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் கலந்து கொண்டார்.இதன்போது, இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டதுடன், இரண்டு இலட்சினைகள், பாடல் என்பனவும் வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.இந் நிகழ்வில் தென்னிந்திய திருச்சபை பேராயர் கலாநிதி வே.பத்மதாயாளன், தென்னிந்திய திருச்சபை முன்னாள் பேராயர் ஜெபநேசன், கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள், பழைய மாணவிகள், பெற்றோர் ,நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement