• Jun 30 2026

எரிபொருள் விலை குறைந்தாலும் முச்சக்கர வண்டி, பாடசாலை போக்குவரத்து கட்டணத்தில் மாற்றமில்லை!

Chithra / Jun 30th 2026, 8:52 pm
image


எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி வாடகை கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது என அந்தந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.

 

நேற்று (29) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், இரண்டு வகையான பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை குறைப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.


அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றஒன்றின் விலை 20 ரூபாயால் குறைக்கப்பட்டு 414 ரூபாயாகவும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டு 382 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது.


இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் டீசல் விலைகளும், மண்ணெண்ணெய் விலையும் மாற்றமின்றி அப்படியே பேணப்படும் என கூட்டுத்தாபனம் குறிப்பிட்டிருந்தது.


எவ்வாறாயினும், எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதன் காரணமாக, தம்மால் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள முடியாது என அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.


 இதேவேளை  நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படாது என தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


முச்சக்கர வண்டி தொழிலானது தற்போது 16 ரூபாய் நஷ்டத்திலேயே இயங்கி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் லலித் ரோஹன பெரேரா குறிப்பிட்டுள்ளார்.


எரிபொருள் விலை குறைந்தாலும் முச்சக்கர வண்டி, பாடசாலை போக்குவரத்து கட்டணத்தில் மாற்றமில்லை எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி வாடகை கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது என அந்தந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன. நேற்று (29) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், இரண்டு வகையான பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை குறைப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றஒன்றின் விலை 20 ரூபாயால் குறைக்கப்பட்டு 414 ரூபாயாகவும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டு 382 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது.இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் டீசல் விலைகளும், மண்ணெண்ணெய் விலையும் மாற்றமின்றி அப்படியே பேணப்படும் என கூட்டுத்தாபனம் குறிப்பிட்டிருந்தது.எவ்வாறாயினும், எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதன் காரணமாக, தம்மால் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள முடியாது என அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை  நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படாது என தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.முச்சக்கர வண்டி தொழிலானது தற்போது 16 ரூபாய் நஷ்டத்திலேயே இயங்கி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் லலித் ரோஹன பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement