• Apr 21 2026

யாழ் வரும் ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள்! செம்மணி புதைகுழியை பார்வையிட ஏற்பாடு

Chithra / Mar 19th 2026, 12:28 pm
image


ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


ஐ.நா பிரதிநிதிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தருவதாகவும், யாழ்ப்பாணம் வருகை தரும் குழுவினர் யாழில் பல தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


இதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஏப்பிரல் மாதம் 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர். 


யாழ்ப்பாணம் வருகை தரும் ஐரோப்பிய யூனியன் குழுவில் நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரூமேனியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர்.


யாழ்ப்பாணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

யாழ் வரும் ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிட ஏற்பாடு ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஐ.நா பிரதிநிதிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தருவதாகவும், யாழ்ப்பாணம் வருகை தரும் குழுவினர் யாழில் பல தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றதுஇதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஏப்பிரல் மாதம் 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர். யாழ்ப்பாணம் வருகை தரும் ஐரோப்பிய யூனியன் குழுவில் நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரூமேனியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர்.யாழ்ப்பாணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement