• Nov 28 2024

ஐ.நா இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி- பிரதமர் சந்திப்பு..!

Sharmi / Oct 23rd 2024, 11:56 am
image

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Marc-Andre Franche, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இதன்போது அவர் தனது வாழ்த்துக்களை பிரதமருக்கு தெரிவித்ததுடன், இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கென வழங்கப்படும் ஐக்கிய நாடுகளின் ஒத்துழைப்புக்களையும் உறுதிப்படுத்தினார். 

இலங்கையின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் டிஜிட்டல்மயப்படுத்தலுக்கான திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது. 

குறித்த சந்திப்பின் போது மகளிருக்கான ஊக்குவிப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் மகளிருக்கான ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்க ஆர்வமுடன் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கான பணிப்பாளர் நாயகம் தயானி மென்டிஸ் உட்பட ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தைச் சேர்ந்த Patrick Mc Carthy  மற்றும் நெத்மினி மெதவல ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.



ஐ.நா இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி- பிரதமர் சந்திப்பு. ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Marc-Andre Franche, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது அவர் தனது வாழ்த்துக்களை பிரதமருக்கு தெரிவித்ததுடன், இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கென வழங்கப்படும் ஐக்கிய நாடுகளின் ஒத்துழைப்புக்களையும் உறுதிப்படுத்தினார். இலங்கையின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் டிஜிட்டல்மயப்படுத்தலுக்கான திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது. குறித்த சந்திப்பின் போது மகளிருக்கான ஊக்குவிப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் முன்னெடுக்கப்படும் மகளிருக்கான ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்க ஆர்வமுடன் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கான பணிப்பாளர் நாயகம் தயானி மென்டிஸ் உட்பட ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தைச் சேர்ந்த Patrick Mc Carthy  மற்றும் நெத்மினி மெதவல ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement