• Mar 17 2026

மாந்தை, விநாயகர் புரத்தில் 36 பேரை மீட்க முடியாத நிலை – எம்.பி ஜெகதீஸ்வரன் கவலை!

Ziya / Nov 30th 2025, 10:28 am
image

நாட்டில் தொடர்ச்சியாக நீடித்து வரும் பெருவெள்ளத்தால் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 

குறிப்பாக சீது விநாயகர் புரம் பகுதியில் சிக்கியுள்ள 36 பேரை இதுவரை மீட்க முடியாத நிலை உருவாகியுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மா. ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம்  தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

சீது விநாயகர் புரம் மக்களை கடந்த மூன்று தினங்களாக மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. எனினும், வெள்ளநீரின் வேகம் மற்றும் அந்தப்பகுதியின் மோசமான நிலைமை காரணமாக மீட்பு நடவடிக்கைகள் பயனளிக்கவில்லை என்றார்.

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கூரலாய் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இந்தப் பகுதியில், 36 பேர் கடும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். 

கடற்படை படகுகள் மூலமாக மூன்று முறை மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், நீரின் ஓட்டம் மற்றும் அணுகுமுறை சிரமம் காரணமாக படகுகள் அப்பகுதிக்கு பாதுகாப்பாக செல்ல முடியவில்லை.

"கடற்படை வீரர்கள் பெரும் ஆபத்தைச் சுமந்த படியே முயற்சிகளை மேற்கொண்டாலும், இயற்கைச் சூழ்நிலையே மீட்புக்கு பெரும் தடை ஏற்பட்டுள்ளது. மக்கள் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன," என  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




























மாந்தை, விநாயகர் புரத்தில் 36 பேரை மீட்க முடியாத நிலை – எம்.பி ஜெகதீஸ்வரன் கவலை நாட்டில் தொடர்ச்சியாக நீடித்து வரும் பெருவெள்ளத்தால் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக சீது விநாயகர் புரம் பகுதியில் சிக்கியுள்ள 36 பேரை இதுவரை மீட்க முடியாத நிலை உருவாகியுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மா. ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.குறித்த விடயம்  தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:சீது விநாயகர் புரம் மக்களை கடந்த மூன்று தினங்களாக மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. எனினும், வெள்ளநீரின் வேகம் மற்றும் அந்தப்பகுதியின் மோசமான நிலைமை காரணமாக மீட்பு நடவடிக்கைகள் பயனளிக்கவில்லை என்றார்.மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கூரலாய் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இந்தப் பகுதியில், 36 பேர் கடும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். கடற்படை படகுகள் மூலமாக மூன்று முறை மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், நீரின் ஓட்டம் மற்றும் அணுகுமுறை சிரமம் காரணமாக படகுகள் அப்பகுதிக்கு பாதுகாப்பாக செல்ல முடியவில்லை."கடற்படை வீரர்கள் பெரும் ஆபத்தைச் சுமந்த படியே முயற்சிகளை மேற்கொண்டாலும், இயற்கைச் சூழ்நிலையே மீட்புக்கு பெரும் தடை ஏற்பட்டுள்ளது. மக்கள் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன," என  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement