மன்னாரில் பல பாகங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
நானாட்டான்,மடு,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆடு மற்றும் மாடு உள்ளடங்களாக ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
குறிப்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனினும் அவர்களினால் இயன்ற அளவிற்கு வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட கால்நடைகளை காப்பாற்றி படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
மீதமிருக்கும் ஆயிரக்கணக்கான கால்நடைகளை ஹெலிகொப்டர் மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்பதோடு பிரதான பாதைகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,மன்னார் -மதவாச்சி பிரதான வீதிகளின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்காக அடித்து செல்லப்பட்ட கால்நடைகள்; வெள்ளத்தின் கோரதாண்டவம்- மீட்கும் பணியில் விவசாயிகள் மன்னாரில் பல பாகங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நானாட்டான்,மடு,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆடு மற்றும் மாடு உள்ளடங்களாக ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. குறிப்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.எனினும் அவர்களினால் இயன்ற அளவிற்கு வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட கால்நடைகளை காப்பாற்றி படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.மீதமிருக்கும் ஆயிரக்கணக்கான கால்நடைகளை ஹெலிகொப்டர் மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்பதோடு பிரதான பாதைகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.இதனால் மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,மன்னார் -மதவாச்சி பிரதான வீதிகளின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளது.