• Jan 19 2026

மெஸ்ஸியை பார்க்க முடியல.. சால்ட் லேக் மைதானத்தை சூறையாடிய ரசிகர்கள்!

Aathira / Dec 13th 2025, 3:50 pm
image

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனெல் மெஸ்ஸியை பார்க்க கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

ஆனால் அவர் 30 நிமிடங்களில் புறப்பட்டதால், அங்கிருந்த ரசிகர்கள்  கோபத்தில் பாட்டில்கள், சேர்கள் உடைத்து சூறையாடியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். 

கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு 70 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் மெஸ்ஸி தோன்றுவார் என்று அறிவிக்கப்பட்டது

அதற்காக டிக்கெட் ஒன்றின் விலை ரூ.4500-12500 வரை விற்கப்பட்டதோடு, மெஸ்ஸி மைதானம் சுற்றி வருவார் என  ஏற்பாட்டாளர்கள் உறுதியும் அளித்து உள்ளனர்.

எனினும், அவ்விடத்தில் பல பிரபலங்கள், அரசியல்வாதிகள், 100க்கும் மேற் பாதுகாவலர்கள் சூழ்ந்ததால் ரசிகர்களால் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை.

இதன் காரணமாகவே நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள் கொந்தளிக்க தொடங்கினர். 

ஒரு கட்டத்தில் கைகளில் இருந்த வாட்டர் பாட்டிலை வீசி எறிய தொடங்கினர். 

இதன்போது, பொலிஸார் தடியடி செய்து கலவரத்தை கட்டுப்படுத்தி உள்ளனர்.

மெஸ்ஸியை பார்க்க முடியல. சால்ட் லேக் மைதானத்தை சூறையாடிய ரசிகர்கள் அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனெல் மெஸ்ஸியை பார்க்க கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.ஆனால் அவர் 30 நிமிடங்களில் புறப்பட்டதால், அங்கிருந்த ரசிகர்கள்  கோபத்தில் பாட்டில்கள், சேர்கள் உடைத்து சூறையாடியுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு 70 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் மெஸ்ஸி தோன்றுவார் என்று அறிவிக்கப்பட்டதுஅதற்காக டிக்கெட் ஒன்றின் விலை ரூ.4500-12500 வரை விற்கப்பட்டதோடு, மெஸ்ஸி மைதானம் சுற்றி வருவார் என  ஏற்பாட்டாளர்கள் உறுதியும் அளித்து உள்ளனர்.எனினும், அவ்விடத்தில் பல பிரபலங்கள், அரசியல்வாதிகள், 100க்கும் மேற் பாதுகாவலர்கள் சூழ்ந்ததால் ரசிகர்களால் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை.இதன் காரணமாகவே நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள் கொந்தளிக்க தொடங்கினர். ஒரு கட்டத்தில் கைகளில் இருந்த வாட்டர் பாட்டிலை வீசி எறிய தொடங்கினர். இதன்போது, பொலிஸார் தடியடி செய்து கலவரத்தை கட்டுப்படுத்தி உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement