• May 11 2025

அரசுக்கு எதிராக சபைகளை நிறுவுவதற்கு நிபந்தனையின்றி ஒத்துழைப்பு! ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு

Chithra / May 11th 2025, 8:27 am
image

 

பணம் மற்றும் சிறப்புரிமைகளுடன் சுயேட்சை குழுக்கள் மீது அரசாங்கம் வலை வீசுவதாகவே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எவ்வாறிருப்பினும் அரசாங்கத்துக்கு எதிராக உள்ளுராட்சிமன்றங்களை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிகள் நிபந்தனைகளின்றி ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி விவகாரத்தில் சந்தேகநபர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

சில சந்தேகநபர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, சிலர் குற்றப்புலனாய்வு பிரிவில் சென்று முறைப்பாடளிக்கின்றனர். 

இதே நிலைமை தொடர்ந்தால் இந்த அரசாங்கத்தால் தொடர்ச்சியாகப் பயணிக்க முடியாது. அரசாங்கம் அதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாக அல்லது ஒரு வருடமா என்பதை தீர்மானிக்க வேண்டிய நிலைமையிலேயே உள்ளது.

பணம் மற்றும் சிறப்புரிமைகளுடன் சுயேட்சை குழுக்கள் மீது அரசாங்கம் வலை வீசுவதாகவே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. 

எவ்வாறிருப்பினும் அரசாங்கத்துக்கு எதிராக உள்ளுராட்சிமன்றங்களை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிகள் நிபந்தனைகளின்றி ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளன. 

ஏனைய கட்சிகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பலமான சபைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தியால் நிறுவப்பட்டால் உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர் என்பது உறுதியாகும். என்றார். 

அரசுக்கு எதிராக சபைகளை நிறுவுவதற்கு நிபந்தனையின்றி ஒத்துழைப்பு ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு  பணம் மற்றும் சிறப்புரிமைகளுடன் சுயேட்சை குழுக்கள் மீது அரசாங்கம் வலை வீசுவதாகவே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எவ்வாறிருப்பினும் அரசாங்கத்துக்கு எதிராக உள்ளுராட்சிமன்றங்களை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிகள் நிபந்தனைகளின்றி ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி விவகாரத்தில் சந்தேகநபர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.சில சந்தேகநபர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, சிலர் குற்றப்புலனாய்வு பிரிவில் சென்று முறைப்பாடளிக்கின்றனர். இதே நிலைமை தொடர்ந்தால் இந்த அரசாங்கத்தால் தொடர்ச்சியாகப் பயணிக்க முடியாது. அரசாங்கம் அதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாக அல்லது ஒரு வருடமா என்பதை தீர்மானிக்க வேண்டிய நிலைமையிலேயே உள்ளது.பணம் மற்றும் சிறப்புரிமைகளுடன் சுயேட்சை குழுக்கள் மீது அரசாங்கம் வலை வீசுவதாகவே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எவ்வாறிருப்பினும் அரசாங்கத்துக்கு எதிராக உள்ளுராட்சிமன்றங்களை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிகள் நிபந்தனைகளின்றி ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளன. ஏனைய கட்சிகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பலமான சபைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தியால் நிறுவப்பட்டால் உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர் என்பது உறுதியாகும். என்றார். 

Advertisement

Advertisement

Advertisement