• May 21 2026

பாதாள உலகக் குழு உறுப்பினர் 'கொண்ட ரஞ்சி' டுபாயில் கைது; இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற வேளை சிக்கினார்!

shanu / Jan 10th 2026, 6:14 pm
image

பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கொண்ட ரஞ்சி' என்ற ரஞ்சித் குமார, இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 


குறித்த சந்தேகநபர் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் மனைவியும் பிள்ளைகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 


முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஒருவரே இந்த 'கொண்ட ரஞ்சி' என்ற ரஞ்சித் குமார எனத் தெரிவிக்கப்படுகிறது. 


சந்தேகநபரான கொண்ட ரஞ்சி  தற்போது டுபாய் பொலிஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 


'கொண்ட ரஞ்சி' ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் 'கோல்டன் விசா' எனப்படும் 10 வருடங்களுக்கான வதிவிட விசா உரிமையாளர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதாள உலகக் குழு உறுப்பினர் 'கொண்ட ரஞ்சி' டுபாயில் கைது; இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற வேளை சிக்கினார் பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கொண்ட ரஞ்சி' என்ற ரஞ்சித் குமார, இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் மனைவியும் பிள்ளைகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஒருவரே இந்த 'கொண்ட ரஞ்சி' என்ற ரஞ்சித் குமார எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபரான கொண்ட ரஞ்சி  தற்போது டுபாய் பொலிஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 'கொண்ட ரஞ்சி' ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் 'கோல்டன் விசா' எனப்படும் 10 வருடங்களுக்கான வதிவிட விசா உரிமையாளர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement