• Mar 09 2026

அமைதிக்கான நோபல் பரிசு எனக்கு வேண்டும் மீண்டும் டிரம்ப் பிடிவாதம்

dorin / Jan 10th 2026, 6:47 pm
image

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலைத் தான் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், வரலாற்றில் தன்னை விட நோபல் அமைதிப் பரிசுக்குத் தகுதியானவர் யாரும் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார் 

நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பெரிய போர் வெடிக்கும் சூழல் இருந்தது.

எட்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த நேரத்தில் நான் தலையிட்டுப் போரை நிறுத்தினேன்.

வரலாற்றில் நோபல் அமைதிப் பரிசுக்கு என்னைப் போல தகுதியானவர்கள் வேறு யாரும் இல்லை.

ஆனால், ஒபாமா எந்த ஒரு பணியும் செய்யாமலே நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார்.

இதுவரை சுமார் 8 பெரிய போர்களைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைத்துள்ளேன். அவற்றில் சில 25 முதல் 36 ஆண்டுகள் வரை நீடித்தவை" என்று தெரிவித்தார்.

அதேநேரம், சர்வதேச விதிகள் எனக்குப் பொருந்தாது என்று கூறியுள்ள டிரம்ப் , வெனிசுலா மற்றும் ஈரான் விவகாரங்களிலும் தான் தலையிடுவேன் என்று தெரிவித்தார்.

வெனிசுலா அதிபரைக் கடத்தியதற்கு மத்தியில் டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கேட்பது பேசுபொருளாகி வருகிறது

அமைதிக்கான நோபல் பரிசு எனக்கு வேண்டும் மீண்டும் டிரம்ப் பிடிவாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலைத் தான் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், வரலாற்றில் தன்னை விட நோபல் அமைதிப் பரிசுக்குத் தகுதியானவர் யாரும் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பெரிய போர் வெடிக்கும் சூழல் இருந்தது.எட்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த நேரத்தில் நான் தலையிட்டுப் போரை நிறுத்தினேன்.வரலாற்றில் நோபல் அமைதிப் பரிசுக்கு என்னைப் போல தகுதியானவர்கள் வேறு யாரும் இல்லை.ஆனால், ஒபாமா எந்த ஒரு பணியும் செய்யாமலே நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார்.இதுவரை சுமார் 8 பெரிய போர்களைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைத்துள்ளேன். அவற்றில் சில 25 முதல் 36 ஆண்டுகள் வரை நீடித்தவை" என்று தெரிவித்தார்.அதேநேரம், சர்வதேச விதிகள் எனக்குப் பொருந்தாது என்று கூறியுள்ள டிரம்ப் , வெனிசுலா மற்றும் ஈரான் விவகாரங்களிலும் தான் தலையிடுவேன் என்று தெரிவித்தார்.வெனிசுலா அதிபரைக் கடத்தியதற்கு மத்தியில் டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கேட்பது பேசுபொருளாகி வருகிறது

Advertisement

Advertisement

Advertisement