கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் இன்று (4) பிற்பகல் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் சிறுவர்கள் தமது பொழுதுபோக்கு நடவடிக்கைக்காக நீர் ஓடும் வாய்க்கால் அருகாமையில் சென்றபோது வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்றினை அவதானித்துள்ளனர்.
உடனடியாக அச் சிறுவர்கள் கிளிநொச்சி பொலிசாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் ஆபத்தான நிலையில் காணப்பட்ட கைக்குண்டை உரிய பாதுகாப்புடன் அகற்றுவதற்கு கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவுக்கு தகவலை அனுப்பியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை குறித்த இடத்தில் பாதுகாப்புக்காக கிளிநொச்சி பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கைகயில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் இனங்காணப்பட்ட வெடிக்காத கைக்குண்டு பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிசார் கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் இன்று (4) பிற்பகல் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளதுஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் சிறுவர்கள் தமது பொழுதுபோக்கு நடவடிக்கைக்காக நீர் ஓடும் வாய்க்கால் அருகாமையில் சென்றபோது வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்றினை அவதானித்துள்ளனர். உடனடியாக அச் சிறுவர்கள் கிளிநொச்சி பொலிசாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் ஆபத்தான நிலையில் காணப்பட்ட கைக்குண்டை உரிய பாதுகாப்புடன் அகற்றுவதற்கு கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவுக்கு தகவலை அனுப்பியுள்ளனர். நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை குறித்த இடத்தில் பாதுகாப்புக்காக கிளிநொச்சி பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கைகயில் ஈடுபட்டு வருகின்றனர்.