இனந்தெரியாத பங்கஸ் தொற்றுக் காரணமான நாட்டில் தேயிலைப் பயிர்ச் செய்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் பங்கஸானது தேயிலைக் கொழுந்துகளையே அதிகளவில் பாதிப்பதாகவும், இதனால் தேயிலை உற்பத்தியானது நூற்றுக்கு 40 முதல் 50 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இரத்தினபுரி பலாங்கொடை உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இப் பங்கஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இனந்தெரியாத பங்கஸ் தொற்று - தேயிலைப் பயிர்ச்செய்கை பாதிப்பு இனந்தெரியாத பங்கஸ் தொற்றுக் காரணமான நாட்டில் தேயிலைப் பயிர்ச் செய்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப் பங்கஸானது தேயிலைக் கொழுந்துகளையே அதிகளவில் பாதிப்பதாகவும், இதனால் தேயிலை உற்பத்தியானது நூற்றுக்கு 40 முதல் 50 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இரத்தினபுரி பலாங்கொடை உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் இப் பங்கஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.