• Mar 18 2025

காரைதீவு பிரதேச சபைக்கு ஐக்கிய சமாதான கூட்டமைப்பு தனித்துப்போட்டி

Chithra / Mar 18th 2025, 2:51 pm
image


உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்பாறை மாவட்ட செயலகத்தில் உள்ள  தேர்தல் அலுவலத்தில் இன்றைய தினம்(18)  அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தி வருகின்றன.

இதற்கமைய உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சார்பாக காரைதீவு பிரதேச சபை வேட்பு மனுக்களுக்கான கட்டுப்பணம் இன்று (18) அம்பாறை மாவட்ட  தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது.

இதன் போது ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவர் கலாநிதி ஹக்கீம் செரீப் உட்பட  ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இணைப்புச் செயலாளர் ஏ.எம்.  அகுவர்  ஆகியோர் இணைந்து கட்டுப்பணத்தைச் செலுத்தினர்.

மேலும் எதிர்வரும் உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் தமது ஐக்கிய சமாதான கூட்டமைப்பு போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவர் சரீப் ஹக்கீம் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் தெரிவித்தார்.


காரைதீவு பிரதேச சபைக்கு ஐக்கிய சமாதான கூட்டமைப்பு தனித்துப்போட்டி உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்பாறை மாவட்ட செயலகத்தில் உள்ள  தேர்தல் அலுவலத்தில் இன்றைய தினம்(18)  அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தி வருகின்றன.இதற்கமைய உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சார்பாக காரைதீவு பிரதேச சபை வேட்பு மனுக்களுக்கான கட்டுப்பணம் இன்று (18) அம்பாறை மாவட்ட  தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது.இதன் போது ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவர் கலாநிதி ஹக்கீம் செரீப் உட்பட  ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இணைப்புச் செயலாளர் ஏ.எம்.  அகுவர்  ஆகியோர் இணைந்து கட்டுப்பணத்தைச் செலுத்தினர்.மேலும் எதிர்வரும் உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் தமது ஐக்கிய சமாதான கூட்டமைப்பு போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவர் சரீப் ஹக்கீம் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement