• Dec 19 2024

காலாவதியான தடுப்பூசி செலுத்தப்பட்ட பல்கலை மாணவர்கள் வைத்தியசாலையில்! - வெடித்த போராட்டம்

Chithra / Dec 18th 2024, 8:15 am
image

 

பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தினால் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்கள் 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்று பிற்பகல் 6 மாணவிகளும் ஒரு மாணவனும் பெலிஹுல் ஓயா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சமனல வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பல்கலைக்கழக வைத்தியசாலையில் இரண்டு மாத காலாவதியான தடுப்பூசிகளை செலுத்தியதன் காரணமாகவே குறித்த மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பம்பஹின்ன சந்தியில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும் எனவும் மருத்துவ மையத்தின் வசதிகள் விரிவுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


காலாவதியான தடுப்பூசி செலுத்தப்பட்ட பல்கலை மாணவர்கள் வைத்தியசாலையில் - வெடித்த போராட்டம்  பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தினால் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்கள் 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் 6 மாணவிகளும் ஒரு மாணவனும் பெலிஹுல் ஓயா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சமனல வெவ பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பல்கலைக்கழக வைத்தியசாலையில் இரண்டு மாத காலாவதியான தடுப்பூசிகளை செலுத்தியதன் காரணமாகவே குறித்த மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பம்பஹின்ன சந்தியில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும் எனவும் மருத்துவ மையத்தின் வசதிகள் விரிவுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement