இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மிக உயரிய பதவிகளில் பெரும்பாலானவை தற்காலிக அதிகாரிகளால் வகிக்கப்பட்டு வருவதாலும், கொள்ளளவை மீறிய வகையில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாலும் ஒட்டுமொத்த சிறை நிர்வாகமும் பாதுகாப்பும் பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப செயலாளர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார்.
இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், நாட்டின் மிக முக்கிய மற்றும் பாதுகாப்புக்குரிய திணைக்களங்களில் ஒன்றான சிறைச்சாலைகள் திணைக்களம் தற்போது தற்காலிக அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் முடங்கியுள்ளது என சுட்டிக்காட்டிய அவர், திணைக்களத்தின் மிக உயரிய 6 பதவிகளில் 5 பதவிகளை, அதாவது 83 சதவீதத்துக்கும் அதிகமான பொறுப்புக்களை தற்காலிகமாக கடமையாற்றும் அதிகாரிகளே மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
தற்போதைய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நிர்வாகப் பிரிவின் 2ஆம் மற்றும் 3ஆம் நிலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைகளின் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க உள்ளிட்ட அனைவரும் தற்காலிக அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டிலுள்ள 34 சிறைச்சாலைகளில், மேல் மாகாணத்தில் உள்ள 8 பிரதான சிறைச்சாலைகள் உட்பட அனைத்து சிறைச்சாலைகளினதும் ஒட்டுமொத்த பாதுகாப்பு விவகாரங்களும் இவ்வாறு தற்காலிக அதிகாரிகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அரச நிர்வாக விதிமுறைகளின்படி தற்காலிக அதிகாரிகளால் எவ்வித தன்னிச்சையான மற்றும் தீர்க்கமான முடிவுகளையும் எடுக்க முடியாது என்பதால் இத்திணைக்களத்தின் ஒட்டுமொத்த செயற்பாடுகளும் முடங்கிக் காணப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடி மற்றும் கைதிகளின் விபரங்கள் குறித்து புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், நீதிமன்றங்களால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எண்ணிக்கை 10,662 ஆகக் காணப்படும் அதேவேளை, குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் சந்தேகத்தின் பேரில் சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 27,681 ஆகக் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
இதன்படி சிறையிலுள்ள மொத்த நபர்களில் 73 சதவீதமானோர் வெறும் சந்தேகநபர்கள் மட்டுமே என்றும், தண்டனை பெற்ற கைதிகளை விட 3 மடங்கு அதிகளவிலான சந்தேகநபர்கள் அடைக்கப்பட்டுள்ளமை சிறைகளின் கொள்ளளவை மீறிய நிர்வாகச் சீர்குலைவுக்கு வழிவகுத்துள்ளதுடன், நாட்டின் மொத்த சிறைக்கைதிகளில் 52 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சிறைச்சாலை திணைக்களத்தில் உள்ள மொத்த ஊழியர்கள் 6,400 பேரில் சீருடை அணியும் தகுதி பெற்றவர்கள் 5,714 பேராவர் என்றும், இவர்களில் சிறைச்சாலைகளின் நேரடிப் பாதுகாப்பில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்ணிக்கை 4,220 ஆகும் என்றும் தெரிவித்த அவர், சிறைச்சாலைகள் 24 மணித்தியாலமும் இயங்குவதால் பாதுகாப்பு அதிகாரிகள் 8 மணிநேர சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர் என்றார்.
இதன் காரணமாக, இலங்கையில் ஒரு பாதுகாப்பு அதிகாரி 30 கைதிகளைக் கண்காணிக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், சர்வதேச மற்றும் தெற்காசிய நாடுகளின் சட்ட திட்டங்களின்படி ஒரு அதிகாரிக்கு அதிகபட்சமாக 8 கைதிகள் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என்ற நிலையில், உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் தங்களின் இயல்பான பணித்திறனை விட அதிகமான பணிச்சுமையையும் கடுமையான மன அழுத்தத்தையும் எதிர்கொள்கின்றனர் என்றும் அவர் விவரித்தார்.
இந்த நிர்வாக மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகளுக்குத் தீர்வாக, நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளையும் இன்னும் குற்றம் நிரூபிக்கப்படாத சந்தேகநபர்களையும் ஒரே சிறையில் அடைத்து வைப்பது சர்வதேச மனித உரிமை நெறிமுறைகளுக்கு முரணானது என்பதால், இவ்விரு தரப்பினரையும் உடனடியாக வெவ்வேறு கட்டமைப்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன், சிறைகளில் ஏற்படக்கூடிய வன்முறைகள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு, நாட்டின் 34 சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய வகையில் நவீன டிஜிட்டல் சிறை கண்காணிப்பு மையம் ஒன்றை உருவாக்க அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும் என்றும் கலாநிதி சுரேன் ராகவன் மேலும் கேட்டுக்கொண்டார்.
சிறைச்சாலைத் திணைக்களத்தில் முன்னெப்போதும் இல்லாத நிர்வாக முடக்கம்: சுரேன் ராகவன் குற்றச்சாட்டு இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மிக உயரிய பதவிகளில் பெரும்பாலானவை தற்காலிக அதிகாரிகளால் வகிக்கப்பட்டு வருவதாலும், கொள்ளளவை மீறிய வகையில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாலும் ஒட்டுமொத்த சிறை நிர்வாகமும் பாதுகாப்பும் பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப செயலாளர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார்.இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், நாட்டின் மிக முக்கிய மற்றும் பாதுகாப்புக்குரிய திணைக்களங்களில் ஒன்றான சிறைச்சாலைகள் திணைக்களம் தற்போது தற்காலிக அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் முடங்கியுள்ளது என சுட்டிக்காட்டிய அவர், திணைக்களத்தின் மிக உயரிய 6 பதவிகளில் 5 பதவிகளை, அதாவது 83 சதவீதத்துக்கும் அதிகமான பொறுப்புக்களை தற்காலிகமாக கடமையாற்றும் அதிகாரிகளே மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். தற்போதைய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நிர்வாகப் பிரிவின் 2ஆம் மற்றும் 3ஆம் நிலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைகளின் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க உள்ளிட்ட அனைவரும் தற்காலிக அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலுள்ள 34 சிறைச்சாலைகளில், மேல் மாகாணத்தில் உள்ள 8 பிரதான சிறைச்சாலைகள் உட்பட அனைத்து சிறைச்சாலைகளினதும் ஒட்டுமொத்த பாதுகாப்பு விவகாரங்களும் இவ்வாறு தற்காலிக அதிகாரிகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அரச நிர்வாக விதிமுறைகளின்படி தற்காலிக அதிகாரிகளால் எவ்வித தன்னிச்சையான மற்றும் தீர்க்கமான முடிவுகளையும் எடுக்க முடியாது என்பதால் இத்திணைக்களத்தின் ஒட்டுமொத்த செயற்பாடுகளும் முடங்கிக் காணப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இதேவேளை, சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடி மற்றும் கைதிகளின் விபரங்கள் குறித்து புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், நீதிமன்றங்களால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எண்ணிக்கை 10,662 ஆகக் காணப்படும் அதேவேளை, குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் சந்தேகத்தின் பேரில் சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 27,681 ஆகக் காணப்படுவதாகத் தெரிவித்தார். இதன்படி சிறையிலுள்ள மொத்த நபர்களில் 73 சதவீதமானோர் வெறும் சந்தேகநபர்கள் மட்டுமே என்றும், தண்டனை பெற்ற கைதிகளை விட 3 மடங்கு அதிகளவிலான சந்தேகநபர்கள் அடைக்கப்பட்டுள்ளமை சிறைகளின் கொள்ளளவை மீறிய நிர்வாகச் சீர்குலைவுக்கு வழிவகுத்துள்ளதுடன், நாட்டின் மொத்த சிறைக்கைதிகளில் 52 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும், சிறைச்சாலை திணைக்களத்தில் உள்ள மொத்த ஊழியர்கள் 6,400 பேரில் சீருடை அணியும் தகுதி பெற்றவர்கள் 5,714 பேராவர் என்றும், இவர்களில் சிறைச்சாலைகளின் நேரடிப் பாதுகாப்பில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்ணிக்கை 4,220 ஆகும் என்றும் தெரிவித்த அவர், சிறைச்சாலைகள் 24 மணித்தியாலமும் இயங்குவதால் பாதுகாப்பு அதிகாரிகள் 8 மணிநேர சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர் என்றார். இதன் காரணமாக, இலங்கையில் ஒரு பாதுகாப்பு அதிகாரி 30 கைதிகளைக் கண்காணிக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், சர்வதேச மற்றும் தெற்காசிய நாடுகளின் சட்ட திட்டங்களின்படி ஒரு அதிகாரிக்கு அதிகபட்சமாக 8 கைதிகள் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என்ற நிலையில், உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் தங்களின் இயல்பான பணித்திறனை விட அதிகமான பணிச்சுமையையும் கடுமையான மன அழுத்தத்தையும் எதிர்கொள்கின்றனர் என்றும் அவர் விவரித்தார்.இந்த நிர்வாக மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகளுக்குத் தீர்வாக, நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளையும் இன்னும் குற்றம் நிரூபிக்கப்படாத சந்தேகநபர்களையும் ஒரே சிறையில் அடைத்து வைப்பது சர்வதேச மனித உரிமை நெறிமுறைகளுக்கு முரணானது என்பதால், இவ்விரு தரப்பினரையும் உடனடியாக வெவ்வேறு கட்டமைப்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அத்துடன், சிறைகளில் ஏற்படக்கூடிய வன்முறைகள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு, நாட்டின் 34 சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய வகையில் நவீன டிஜிட்டல் சிறை கண்காணிப்பு மையம் ஒன்றை உருவாக்க அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும் என்றும் கலாநிதி சுரேன் ராகவன் மேலும் கேட்டுக்கொண்டார்.