• May 03 2024

வரலாறு காணாத விலை உயர்வு- இரண்டாயிரத்தை கடந்த கேரட் விலை...! மக்கள் அதிர்ச்சி...!samugammedia

Sharmi / Jan 16th 2024, 9:48 am
image

Advertisement

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

இவ்வாறானதொரு நிலையில், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தையில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக  மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மரக்கறிகளின் விலை உயர்வால் அனுராதபுரம் நுவரெலியா தம்புள்ளை பொதுச் சந்தைக்கு வந்த பெருந்தொகையான நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்துள்ளனர்.

ஏனைய நாட்களில் அனுராதபுரம் , நுவரெலியா, தம்புள்ளை பொதுச் சந்தைக்கு அதிகளவான நுகர்வோர்கள் வருகை தந்திருந்த நிலையில் இன்றைய தினங்களில் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் சந்தைக்கு வருவதில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட் மொத்த விலை 1500 ரூபாவாகவும் சில்லறை விலை 1700 ரூபாவாகவும் இன்று மேற்கொள்ளப்பட்ட வினவுதலில் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்தார்.

ஒரு கிலோ போஞ்சி மொத்த விலை 1000 ரூபாவாகவும் சில்லறை விலை 1400.00 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

அதேவேளை, ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 1000 ரூபாவாகவும், சில்லறை விலை கிலோ ஒன்றின் மொத்த விலை 1,300 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தனர் .

வரலாறு காணாத விலை உயர்வு- இரண்டாயிரத்தை கடந்த கேரட் விலை. மக்கள் அதிர்ச்சி.samugammedia நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன.இவ்வாறானதொரு நிலையில், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தையில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.அதேபோன்று மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக  மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.மரக்கறிகளின் விலை உயர்வால் அனுராதபுரம் நுவரெலியா தம்புள்ளை பொதுச் சந்தைக்கு வந்த பெருந்தொகையான நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்துள்ளனர்.ஏனைய நாட்களில் அனுராதபுரம் , நுவரெலியா, தம்புள்ளை பொதுச் சந்தைக்கு அதிகளவான நுகர்வோர்கள் வருகை தந்திருந்த நிலையில் இன்றைய தினங்களில் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் சந்தைக்கு வருவதில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட் மொத்த விலை 1500 ரூபாவாகவும் சில்லறை விலை 1700 ரூபாவாகவும் இன்று மேற்கொள்ளப்பட்ட வினவுதலில் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்தார்.ஒரு கிலோ போஞ்சி மொத்த விலை 1000 ரூபாவாகவும் சில்லறை விலை 1400.00 ரூபாவாகவும் காணப்படுகின்றது.அதேவேளை, ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 1000 ரூபாவாகவும், சில்லறை விலை கிலோ ஒன்றின் மொத்த விலை 1,300 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தனர் .

Advertisement

Advertisement

Advertisement