யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்ற முதலாவது ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அந்த கலந்துரையாடலில் அதிகாரிகளை விமர்சித்துள்ளார்.
இதன் போது அவரை வெளியேற்றுமாறு அதிகாரிகள் தெரிவித்த நிலையில் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலையீட்டின் பின்னர் அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அமைதியின்மை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்ற முதலாவது ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அந்த கலந்துரையாடலில் அதிகாரிகளை விமர்சித்துள்ளார். இதன் போது அவரை வெளியேற்றுமாறு அதிகாரிகள் தெரிவித்த நிலையில் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலையீட்டின் பின்னர் அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.