எல்ல வெல்லவாய பிரதான வீதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் எல்ல வெல்லவாய வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எல்ல மற்றும் வெல்லவாய நோக்கி வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்படுவதாக எல்ல பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.