அரச, தனியார் பேருந்து தரப்பினருக்கு இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டமையால் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை அமைதியின்மை ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
வவுனியாவில் இருந்து கல்முனை நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த அரச பேருந்து தரப்பினருக்கும், தனியார் பேருந்து தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அரச பேருந்து புறப்படுகின்ற நேரம் தொடர்பிலேயே குறித்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பேருந்து நிலையப் பகுதியில் இரு தரப்பிற்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் நிலைமையை கட்டுப்படுத்தியிருந்தனர்.
இதேவேளை பேருந்து நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்துச் சபையின் நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்து வருவதுடன்,
அரச பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அமைதியின்மை நேரக்கணிப்பாளர் மீதும் தாக்குதல் அரச, தனியார் பேருந்து தரப்பினருக்கு இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டமையால் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை அமைதியின்மை ஏற்பட்டதாக தெரியவருகின்றது.வவுனியாவில் இருந்து கல்முனை நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த அரச பேருந்து தரப்பினருக்கும், தனியார் பேருந்து தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அரச பேருந்து புறப்படுகின்ற நேரம் தொடர்பிலேயே குறித்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலையப் பகுதியில் இரு தரப்பிற்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் நிலைமையை கட்டுப்படுத்தியிருந்தனர். இதேவேளை பேருந்து நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்துச் சபையின் நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்து வருவதுடன்,அரச பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.