• Nov 07 2025

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் நடந்த அசம்பாவிதம்; 32 புறாக்கள் மாயம்

Chithra / Oct 6th 2025, 1:16 pm
image

 

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆர்.சி. ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திருட்டு கடந்த 4 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. 

விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டை உடைத்து இந்தப் புறாக்கள் திருடப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவின் பேரில் உள்ள புறாக்களே இந்த புறாக்கள் எனவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். 

இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைதுசெய்யுமாறு தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார். 

திருடப்பட்ட புறாக்கள் தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த விவகாரம் குறித்துச் சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் நடந்த அசம்பாவிதம்; 32 புறாக்கள் மாயம்  தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆர்.சி. ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த திருட்டு கடந்த 4 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டை உடைத்து இந்தப் புறாக்கள் திருடப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவின் பேரில் உள்ள புறாக்களே இந்த புறாக்கள் எனவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைதுசெய்யுமாறு தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார். திருடப்பட்ட புறாக்கள் தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த விவகாரம் குறித்துச் சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement