தேர்தல் நாள் நெருங்கும்போது பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புக்கான பொலிஸ் குழுக்களை கடமையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பொலிஸாரின் தேர்தல் பிரிவு, தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் நாடு தழுவிய வன்முறை நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அனைத்து சம்பவங்களும் பதிவு செய்யப்படுகின்றன. எந்தவொரு மீறல்களுக்கும் எதிராக நாங்கள் உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறோம்,
தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் போது சிறப்பு முன்னெச்சரிக்கைகள் செயற்படுத்தப்பட்டன.
தற்போது, வழக்கமான பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, தேர்தல் நாள் நெருங்கும்போது பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புக்கான பொலிஸ் குழுக்களை கடமையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளோம்.
தேர்தல் காலத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்களைக் குறைப்பதற்காக, பொலிஸாரின் சிறப்புப் படை மற்றும் முப்படை வீரர்கள் போன்ற சிறப்புப் பிரிவுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
நெருங்கும் தேர்தல் - விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் அறிவிப்பு தேர்தல் நாள் நெருங்கும்போது பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புக்கான பொலிஸ் குழுக்களை கடமையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.பொலிஸாரின் தேர்தல் பிரிவு, தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் நாடு தழுவிய வன்முறை நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.அனைத்து சம்பவங்களும் பதிவு செய்யப்படுகின்றன. எந்தவொரு மீறல்களுக்கும் எதிராக நாங்கள் உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறோம், தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் போது சிறப்பு முன்னெச்சரிக்கைகள் செயற்படுத்தப்பட்டன.தற்போது, வழக்கமான பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, தேர்தல் நாள் நெருங்கும்போது பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புக்கான பொலிஸ் குழுக்களை கடமையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளோம்.தேர்தல் காலத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்களைக் குறைப்பதற்காக, பொலிஸாரின் சிறப்புப் படை மற்றும் முப்படை வீரர்கள் போன்ற சிறப்புப் பிரிவுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.