நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் எனவும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் மாலை அல்லது இரவு, வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும்,
இதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலின் தாக்கம் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை எதிர்வரும் 10 ஆம் திகதி நண்பகலுக்கு பின்னர் இலங்கையின் தென்கரையோரத்தை அண்மித்த வங்காள விரிகுடாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதனால் எதிர்வரும் 11.08.2024 முதல் 17.08.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதேவேளை தற்போது வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மேற்காவுகை மழை எதிர்வரும் 11.08.2024 வரை தொடரும் வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
வங்காள விரிகுடாவில் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி - 17 ஆம் திகதி வரை கனமழை நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் எனவும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் மாலை அல்லது இரவு, வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும்,இதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலின் தாக்கம் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை எதிர்வரும் 10 ஆம் திகதி நண்பகலுக்கு பின்னர் இலங்கையின் தென்கரையோரத்தை அண்மித்த வங்காள விரிகுடாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இதனால் எதிர்வரும் 11.08.2024 முதல் 17.08.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதேவேளை தற்போது வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மேற்காவுகை மழை எதிர்வரும் 11.08.2024 வரை தொடரும் வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்