• May 15 2026

தெற்கு அதிவேக வீதி சாரதிகளுக்கு பொலிஸாரின் அவசர அறிவிப்பு

Chithra / May 14th 2026, 8:43 am
image

வெள்ள நீரினால் மூழ்கியிருந்த தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன பரிமாற்ற நுழைவு வீதிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 


நேற்று (13) குறித்த பரிமாற்றப் பகுதியில் உள்ள அளுத்கம - மத்துகம வீதி வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக, கொழும்பு நோக்கி நுழையும் வாயில், கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் வெளியேறும் வாயில் மற்றும் காலியிலிருந்து வரும் வாகனங்கள் வெளியேறும் வாயில் என்பன சொகுசு மற்றும் சிறிய ரக வாகனங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. 


தற்போது வெள்ள நீர் வடிந்துள்ள நிலையில், போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக வெலிபென்ன பரிமாற்ற நுழைவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

 

மேலும், சாரதிகள் நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது மிகுந்த அவதானத்துடனும் பாதுகாப்பாகவும், முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


தெற்கு அதிவேக வீதி சாரதிகளுக்கு பொலிஸாரின் அவசர அறிவிப்பு வெள்ள நீரினால் மூழ்கியிருந்த தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன பரிமாற்ற நுழைவு வீதிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நேற்று (13) குறித்த பரிமாற்றப் பகுதியில் உள்ள அளுத்கம - மத்துகம வீதி வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக, கொழும்பு நோக்கி நுழையும் வாயில், கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் வெளியேறும் வாயில் மற்றும் காலியிலிருந்து வரும் வாகனங்கள் வெளியேறும் வாயில் என்பன சொகுசு மற்றும் சிறிய ரக வாகனங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. தற்போது வெள்ள நீர் வடிந்துள்ள நிலையில், போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக வெலிபென்ன பரிமாற்ற நுழைவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். மேலும், சாரதிகள் நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது மிகுந்த அவதானத்துடனும் பாதுகாப்பாகவும், முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement