பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கல்வித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், தலைமைத்துவம் மற்றும் திட்டமிடலில் கல்வித் துறை அதிகாரிகளின் திறன்களை வளர்ப்பதற்கான பயிற்சித் திட்டங்களின் அவசியத்தையும் குறிப்பிட்டார்.
தமிழ் மொழியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு அவசர தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும், கல்வி மற்றும் தரத்திற்கான அணுகலை மேம்படுத்த இலங்கையில் நடந்து வரும் கல்வி சீர்திருத்தங்களையும் பிரதமர் விளக்கினார்.
அதேநேரம், இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் இந்தியத் திட்டங்களை விளக்கிய இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,
பெருந்தோட்ட பகுதி பாடசாலை திட்டங்கள், திறன் வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
அத்துடன், கல்வித் துறையில் மேலும் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான இந்திய அரசாங்கத்தின் ஆர்வத்தை வெளிப்படுத்திய உயர் ஸ்தானிகர், இரு நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கு இடையே புலமைப்பரிசில் வழங்குவது குறித்தும் கலந்துரையாடியதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தமிழ் மொழிமூல ஆசிரியர் பற்றாக்குறைக்கு அவசர தீர்வு; சந்தோஷ் ஜாவுக்கு ஹரிணி எடுத்துரைப்பு பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது, கல்வித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், தலைமைத்துவம் மற்றும் திட்டமிடலில் கல்வித் துறை அதிகாரிகளின் திறன்களை வளர்ப்பதற்கான பயிற்சித் திட்டங்களின் அவசியத்தையும் குறிப்பிட்டார்.தமிழ் மொழியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு அவசர தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும், கல்வி மற்றும் தரத்திற்கான அணுகலை மேம்படுத்த இலங்கையில் நடந்து வரும் கல்வி சீர்திருத்தங்களையும் பிரதமர் விளக்கினார்.அதேநேரம், இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் இந்தியத் திட்டங்களை விளக்கிய இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,பெருந்தோட்ட பகுதி பாடசாலை திட்டங்கள், திறன் வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.அத்துடன், கல்வித் துறையில் மேலும் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான இந்திய அரசாங்கத்தின் ஆர்வத்தை வெளிப்படுத்திய உயர் ஸ்தானிகர், இரு நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கு இடையே புலமைப்பரிசில் வழங்குவது குறித்தும் கலந்துரையாடியதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.