• Feb 06 2025

சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் : வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர்

Tharmini / Dec 7th 2024, 1:48 pm
image

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உள்ளகப் பொறிமுறையை நிராகரிப்பதோடு தொடர்ந்தும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துகின்றோம்.

என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர். 

மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினரால் ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.

அவ் அறிக்கையில் உள்ளதாவது, "நாம் ஒரு தேசிய இனம் ஆனால் தொன்றுதொட்டு சிறுபான்மையினம் என்ற பதத்திற்குள் திட்டமிட்டு தள்ளப்பட்டுள்ளது எம் தமிழினம். 

இன்றும் தனது பிள்ளைகளையும், கணவன்மார்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பரம்பரையில் முதல் வரிசையில் மனம் தளர்ந்து வெந்து கொண்டிருக்கும் உறவுகளாக, வடக்கு/கிழக்கில் ஏங்கிக்கொண்டிருக்கும் தமிழினமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 

இன்று எமது எட்டு மாவட்டத் திலுமாக வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் எண்ணிக்கை 18,817 (பதினெட்டாயிரத்து எண்ணூற்றிப் பதினேழு பேர்) ஆகும். 

அதுமட்டுமல்லாமல் 2009ல் முள்ளிவாய்க்காவலில் நடைப்பெற்ற இறுதி யுத்தத்தின்போது எமது மக்கள் மீது பரிய இனவழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 1,46,679 பேரை இனவழிப்பு செய்துள்ளது. 

நாம் எமது உறவுகளை இறுதி யுத்தத்தில் இழந்து தவிக்கின்றோம்.

நாங்கள் இப்போதும் தொடர்ந்து எமது உறவுகளை தேடிக் கொண்டிருக் கின்றோம். 

ஏனென்றால் எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரியவேண்டும் என்றும், சர்வதேச நீதி கிடைக்க வேண்டும்,என்றும் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

உதாரணமாக சொல்லப்போனால் நாம் எமது வலிந்து காணாமல் எமது கணவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் நாம் இன்றும் பொட்டோடும் பூவோடும் இருக்கின்றோம். 

எமது கணவர் வருவார் வருவார் என்றவாறு. 

நாம் நமது பிள்ளைகள், கணவர்கள், உறவினர்கள், குழந்தைகள், எல்லோரும் வேறு விடயங்களாலோ கொல்லப்படவில்லை அரசு படையினர்களால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று தெரிந்தும் வடக்கு கிழக்கு மக்கள் சோர்ந்து போகாது உறுதியோடு போராடிக் கொண்டிருக்கின்றோம்.

நாம் இன்று உறுதியாக கூறுவது எமக்கு நிரந்தர அரசியல் தீர்வும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நீதியை வலியுறுத்தி எப்போதும் தொடர்ந்தும் எமது உறவுகளை தேடிக் கொண்டிருக்கின்றோம். 

ஏனென்றால் நமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று உண்மை தெரிய வேண்டும் என்றும் சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் என்றும் உரக்கச் கொண்டிருக்கின்றோம். இலங்கையில் வலிந்து சொல்லிக் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் உலகத்தில் இலங்கை இன்று இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. 

அதே நேரம் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்று மறைந்த மன்னார் ஆண்டகை ராயப்பு ஜோசப் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில் இறந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எல்லோரையும் சேர்த்து பார்க்கும் போது இன்னும் கூடலாம் எனக் கூறியுள்ளார்.

அது மட்டும் அல்லாமல் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இன்று வரை யுத்தத்தின் போது குடும்பம் குடும்பமாகவும், தனியாகவும் இராணுவத்தாலும், வெள்ளை வான்களாலும், ஓட்டுக்குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை வைத்து பார்க்கும் போது ஈரானை விட இலங்கை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் முதலாவது இடத்தில் இருக்கும் என உறுதிப்படுத்த கூடியதாக உள்ளது.

ஆகவே நாம் முன்வைக்கும் விடயம் எமக்கு உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என சுட்டிக் காட்டுவதுடன் நாம் சர்வதேச நீதிப் பொறிமுறையை எதிர்பார்த்து நிற்கின்றோம்.

நாம் இலங்கை அரசிடம் எமது உறவை கேட்டு நடத்தும் 15 வருடப் போராட்டத்தில் எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை, இதனால் எமக்கு உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை.

எமக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் திரும்பி வரவேண்டும் என்று காத்திருந்து போராடிக்கொண்டிருந்த 300க்கு மேற்பட்ட உறவுகளை நாம் இழந்து உள்ளோம்.

ஆனால் நமக்கான உண்மைக்கும் நீதிக்குமான தீர்வை இந்த அரசு தராது.

ஆகவே எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை சர்வதேச நீதிப்பொறிமுறை ஊடாக கூறுங்கள் என்று இந்த புதிய அரசிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

அதுமட்டுமல்ல ஓ.எம்.பி (OMP) ஒன்றை இரண்டாயிரத்தி பதினைந்தாம் ஆண்டு நிறுவினார்கள் அந்த ஆபீஸ் மிஸ்ஸிங் பேசன் (Missing Persons) என்ற ஒரு அலுவலகம் வைத்துள்ளது காணாமல் போனவர்களுக்கான நிறுவனம் என்று தான் அதற்கு பெயர் வைத்தனர்.

ஆகவே நாம் உறவுகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், எமது உறவுகள் காணாமல் போனவர்கள் அல்ல.

எனவே ஓ.எம்.பி (OMP) யில் எமக்கு நம்பிக்கை இல்லை.

காரணம் நாம் கொடுத்த ஆவணங்களுக்கு இன்று பதில் இல்லை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரும் கண்டு பிடிக்கப்படவில்லை.

நாம் கொடுத்த அந்த ஐந்து போகச்செய்யப்பட்டுள்ளது.

பையில்களும் ஐ.நா சபை காணாமல் இலங்கயை வலியுறுத்தியதன் பெயரில் தான் இலங்கை இந்த ஒன்றுமில்லாத ஓ எம் பி யை நிறுவியது இந்த ஓ எம் பி யில் உறுப்பினர்களாக இருப்பவர்களில் முக்கியமானவர்கள் எமது உறவுகளை காணாமல் ஆக்க செய்தவர்கள் எனவே இவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது ஆகவே நாம் கொடுத்த பைல்களுக்கு என்ன நடந்தது என்று தான் கேட்கின்றோம்.

அதுமட்டுமல்ல வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார்களுக்கு ஒரு லட்சம் அல்லது ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தும் மரணச்சான்றிதழை கொடுத்தும் நீதி வேண்டிய போராட்டத்தை முடித்துவிட துடிக்கிறது இலங்கையரசு.

அதுமட்டுமல்ல இந்த ஓஎம்பி வடக்கு கிழக்கு மக்களின் இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய எமது பிரச்சனைகளை ஒரு பொருட்டாக பார்க்கவில்லை என்பதை நாம் இலங்கை அரசின் செயற்பாடுகளில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

அதுமட்டுமல்ல ஐநா சபை கூறியதற்கு அமைய ஒரு ஓ எம் பி ஐ திறந்து விட்டோம் என்று நாடகம் ஆடிக்கொண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியை எடுக்கத்தான் இந்த ஓ எம் பி நாடகம் என்றும் நமக்கு தெரியும்.

இந்த பணத்தில் மிகச் சிறு தொகையை எம் உறவுகளுக்கு கொடுத்து விட்டு நாம் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தோம் என சில அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் ஜனாதிபதிகளும் பொய் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இலங்கை அரசு ஒ எம் பி ஐ அமைத்து யாரையும் கண்டுபிடிக்கவில்லை என்பது உண்மை , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டில் உள்ளனர் அப்பட்டமான பொய்யை கூறிக் கொண்டிருக்கிறது. என

இலங்கை அரசு இதிலிருந்து சர்வதேச மனித உரிமை நிலைப்பாட்டை பார்க்கும்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் மனித குலத்துக்கு எதிரான குற்றம் நாம் ஐநாவுக்கு சென்று நமது பிரச்சனையை நிறைய கதைத்த கதைத்து வருகின்றோம்.

இந்த ஐநா சபையை கூட மதிக்காத அரசுதான் இலங்கை அரசு இப்போது வந்திருக்கும் இந்த ஆட்சியை நிறைய தமிழர்கள் நம்புகிறார்கள்.

ஐனாதிபதி அனுர குமார திசநாயக்கா உரையிலேயே தமிழருக்கான இன அடையாளம் மறுக்கப்பட்டு எல்லோரும் ஒட்டுமொத்த இலங்கை மக்கள் என்று கூறியுள்ளார்.

நாம் ஒரு தமிழ் சேசிய இனம் என மீள வலியுறுத்துவதுடன் உள்நாட்டு எந்த பொறிமுறையையும் நாம் ஏற்கப்போவதில்லை என வலியுறுத்துவதுடன் நாம் சர்வதேச நீதிப்பொறிமுறை ஊடாக நீதி வேண்டும் என வலியுறுத்துகின்றோம்" என உள்ளது.


சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் : வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உள்ளகப் பொறிமுறையை நிராகரிப்பதோடு தொடர்ந்தும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துகின்றோம். என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர்.யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர். மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினரால் ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.அவ் அறிக்கையில் உள்ளதாவது, "நாம் ஒரு தேசிய இனம் ஆனால் தொன்றுதொட்டு சிறுபான்மையினம் என்ற பதத்திற்குள் திட்டமிட்டு தள்ளப்பட்டுள்ளது எம் தமிழினம். இன்றும் தனது பிள்ளைகளையும், கணவன்மார்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பரம்பரையில் முதல் வரிசையில் மனம் தளர்ந்து வெந்து கொண்டிருக்கும் உறவுகளாக, வடக்கு/கிழக்கில் ஏங்கிக்கொண்டிருக்கும் தமிழினமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன்று எமது எட்டு மாவட்டத் திலுமாக வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் எண்ணிக்கை 18,817 (பதினெட்டாயிரத்து எண்ணூற்றிப் பதினேழு பேர்) ஆகும். அதுமட்டுமல்லாமல் 2009ல் முள்ளிவாய்க்காவலில் நடைப்பெற்ற இறுதி யுத்தத்தின்போது எமது மக்கள் மீது பரிய இனவழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 1,46,679 பேரை இனவழிப்பு செய்துள்ளது. நாம் எமது உறவுகளை இறுதி யுத்தத்தில் இழந்து தவிக்கின்றோம்.நாங்கள் இப்போதும் தொடர்ந்து எமது உறவுகளை தேடிக் கொண்டிருக் கின்றோம். ஏனென்றால் எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரியவேண்டும் என்றும், சர்வதேச நீதி கிடைக்க வேண்டும்,என்றும் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.உதாரணமாக சொல்லப்போனால் நாம் எமது வலிந்து காணாமல் எமது கணவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் நாம் இன்றும் பொட்டோடும் பூவோடும் இருக்கின்றோம். எமது கணவர் வருவார் வருவார் என்றவாறு. நாம் நமது பிள்ளைகள், கணவர்கள், உறவினர்கள், குழந்தைகள், எல்லோரும் வேறு விடயங்களாலோ கொல்லப்படவில்லை அரசு படையினர்களால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று தெரிந்தும் வடக்கு கிழக்கு மக்கள் சோர்ந்து போகாது உறுதியோடு போராடிக் கொண்டிருக்கின்றோம்.நாம் இன்று உறுதியாக கூறுவது எமக்கு நிரந்தர அரசியல் தீர்வும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நீதியை வலியுறுத்தி எப்போதும் தொடர்ந்தும் எமது உறவுகளை தேடிக் கொண்டிருக்கின்றோம். ஏனென்றால் நமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று உண்மை தெரிய வேண்டும் என்றும் சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் என்றும் உரக்கச் கொண்டிருக்கின்றோம். இலங்கையில் வலிந்து சொல்லிக் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் உலகத்தில் இலங்கை இன்று இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. அதே நேரம் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்று மறைந்த மன்னார் ஆண்டகை ராயப்பு ஜோசப் கூறியுள்ளார். அவர் கூறுகையில் இறந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எல்லோரையும் சேர்த்து பார்க்கும் போது இன்னும் கூடலாம் எனக் கூறியுள்ளார். அது மட்டும் அல்லாமல் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இன்று வரை யுத்தத்தின் போது குடும்பம் குடும்பமாகவும், தனியாகவும் இராணுவத்தாலும், வெள்ளை வான்களாலும், ஓட்டுக்குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை வைத்து பார்க்கும் போது ஈரானை விட இலங்கை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் முதலாவது இடத்தில் இருக்கும் என உறுதிப்படுத்த கூடியதாக உள்ளது. ஆகவே நாம் முன்வைக்கும் விடயம் எமக்கு உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என சுட்டிக் காட்டுவதுடன் நாம் சர்வதேச நீதிப் பொறிமுறையை எதிர்பார்த்து நிற்கின்றோம். நாம் இலங்கை அரசிடம் எமது உறவை கேட்டு நடத்தும் 15 வருடப் போராட்டத்தில் எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை, இதனால் எமக்கு உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை.எமக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் திரும்பி வரவேண்டும் என்று காத்திருந்து போராடிக்கொண்டிருந்த 300க்கு மேற்பட்ட உறவுகளை நாம் இழந்து உள்ளோம். ஆனால் நமக்கான உண்மைக்கும் நீதிக்குமான தீர்வை இந்த அரசு தராது. ஆகவே எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை சர்வதேச நீதிப்பொறிமுறை ஊடாக கூறுங்கள் என்று இந்த புதிய அரசிடம் கேட்டுக் கொள்கின்றோம்.அதுமட்டுமல்ல ஓ.எம்.பி (OMP) ஒன்றை இரண்டாயிரத்தி பதினைந்தாம் ஆண்டு நிறுவினார்கள் அந்த ஆபீஸ் மிஸ்ஸிங் பேசன் (Missing Persons) என்ற ஒரு அலுவலகம் வைத்துள்ளது காணாமல் போனவர்களுக்கான நிறுவனம் என்று தான் அதற்கு பெயர் வைத்தனர். ஆகவே நாம் உறவுகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், எமது உறவுகள் காணாமல் போனவர்கள் அல்ல.எனவே ஓ.எம்.பி (OMP) யில் எமக்கு நம்பிக்கை இல்லை. காரணம் நாம் கொடுத்த ஆவணங்களுக்கு இன்று பதில் இல்லை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரும் கண்டு பிடிக்கப்படவில்லை. நாம் கொடுத்த அந்த ஐந்து போகச்செய்யப்பட்டுள்ளது. பையில்களும் ஐ.நா சபை காணாமல் இலங்கயை வலியுறுத்தியதன் பெயரில் தான் இலங்கை இந்த ஒன்றுமில்லாத ஓ எம் பி யை நிறுவியது இந்த ஓ எம் பி யில் உறுப்பினர்களாக இருப்பவர்களில் முக்கியமானவர்கள் எமது உறவுகளை காணாமல் ஆக்க செய்தவர்கள் எனவே இவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது ஆகவே நாம் கொடுத்த பைல்களுக்கு என்ன நடந்தது என்று தான் கேட்கின்றோம்.அதுமட்டுமல்ல வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார்களுக்கு ஒரு லட்சம் அல்லது ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தும் மரணச்சான்றிதழை கொடுத்தும் நீதி வேண்டிய போராட்டத்தை முடித்துவிட துடிக்கிறது இலங்கையரசு. அதுமட்டுமல்ல இந்த ஓஎம்பி வடக்கு கிழக்கு மக்களின் இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய எமது பிரச்சனைகளை ஒரு பொருட்டாக பார்க்கவில்லை என்பதை நாம் இலங்கை அரசின் செயற்பாடுகளில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. அதுமட்டுமல்ல ஐநா சபை கூறியதற்கு அமைய ஒரு ஓ எம் பி ஐ திறந்து விட்டோம் என்று நாடகம் ஆடிக்கொண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியை எடுக்கத்தான் இந்த ஓ எம் பி நாடகம் என்றும் நமக்கு தெரியும். இந்த பணத்தில் மிகச் சிறு தொகையை எம் உறவுகளுக்கு கொடுத்து விட்டு நாம் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தோம் என சில அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் ஜனாதிபதிகளும் பொய் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இலங்கை அரசு ஒ எம் பி ஐ அமைத்து யாரையும் கண்டுபிடிக்கவில்லை என்பது உண்மை , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டில் உள்ளனர் அப்பட்டமான பொய்யை கூறிக் கொண்டிருக்கிறது. எனஇலங்கை அரசு இதிலிருந்து சர்வதேச மனித உரிமை நிலைப்பாட்டை பார்க்கும்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் மனித குலத்துக்கு எதிரான குற்றம் நாம் ஐநாவுக்கு சென்று நமது பிரச்சனையை நிறைய கதைத்த கதைத்து வருகின்றோம். இந்த ஐநா சபையை கூட மதிக்காத அரசுதான் இலங்கை அரசு இப்போது வந்திருக்கும் இந்த ஆட்சியை நிறைய தமிழர்கள் நம்புகிறார்கள்.ஐனாதிபதி அனுர குமார திசநாயக்கா உரையிலேயே தமிழருக்கான இன அடையாளம் மறுக்கப்பட்டு எல்லோரும் ஒட்டுமொத்த இலங்கை மக்கள் என்று கூறியுள்ளார். நாம் ஒரு தமிழ் சேசிய இனம் என மீள வலியுறுத்துவதுடன் உள்நாட்டு எந்த பொறிமுறையையும் நாம் ஏற்கப்போவதில்லை என வலியுறுத்துவதுடன் நாம் சர்வதேச நீதிப்பொறிமுறை ஊடாக நீதி வேண்டும் என வலியுறுத்துகின்றோம்" என உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement