• Oct 25 2024

யாழில் தமிழ் கட்சிகளுடன் அமெரிக்க தூதுவர் விசேட சந்திப்பு..!

Sharmi / Oct 24th 2024, 3:31 pm
image

Advertisement

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்  நேற்றையதினம்(23) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.

குறித் சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்,

நேற்றையதினம் அமெரிக்க தூதுவர்,  யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய கட்சிகளில் சிறிதரனும் நானும் சந்தித்து கதைத்தோம்.

இதன்போது அவர் முக்கியமாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அநுரகுமார திஸாநாயக்க எப்படி தமிழர்களை கையாள்வார் என்பது தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

அந்தவகையில், கடந்த காலத்தில் ஜே.வி.பியினர் செய்த செயற்பாடுகளை சுட்டிக்காட்டி இவர்கள் அதிகார பகிர்விற்கு  சாதகமாக இருக்கமாட்டார்கள் என்பதை அவரிடம் சுட்டிக்காட்டினோம்.

அதேவேளை நாங்கள் அரசாங்கத்தில் சேர்வதோ அல்லது அதன் ஒரு அங்கமாக இருப்பதோ என்பது நடக்கமுடியாத விடயம். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் அப்படியான விடயத்தை செய்ய மாட்டோம் எனவும் தெரிவித்தோம்.

இது தொடர்பில் பொதுத் தேர்தல் முடிந்த பிற்பாடு ஜனாதிபதியுடன் கதைப்போம் எனவும்  அவர் தெரிவித்தார்.

அதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருடனும் அமெரிக்க தூதுவர் கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழில் தமிழ் கட்சிகளுடன் அமெரிக்க தூதுவர் விசேட சந்திப்பு. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்  நேற்றையதினம்(23) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.இதன்போது தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்,நேற்றையதினம் அமெரிக்க தூதுவர்,  யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய கட்சிகளில் சிறிதரனும் நானும் சந்தித்து கதைத்தோம்.இதன்போது அவர் முக்கியமாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அநுரகுமார திஸாநாயக்க எப்படி தமிழர்களை கையாள்வார் என்பது தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.அந்தவகையில், கடந்த காலத்தில் ஜே.வி.பியினர் செய்த செயற்பாடுகளை சுட்டிக்காட்டி இவர்கள் அதிகார பகிர்விற்கு  சாதகமாக இருக்கமாட்டார்கள் என்பதை அவரிடம் சுட்டிக்காட்டினோம்.அதேவேளை நாங்கள் அரசாங்கத்தில் சேர்வதோ அல்லது அதன் ஒரு அங்கமாக இருப்பதோ என்பது நடக்கமுடியாத விடயம். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் அப்படியான விடயத்தை செய்ய மாட்டோம் எனவும் தெரிவித்தோம்.இது தொடர்பில் பொதுத் தேர்தல் முடிந்த பிற்பாடு ஜனாதிபதியுடன் கதைப்போம் எனவும்  அவர் தெரிவித்தார்.அதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருடனும் அமெரிக்க தூதுவர் கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement