தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளார்
அதன்படி இம்மாதம் 10 – 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அவர் இன்றைய தினம் இலங்கைக்கு வந்துள்ளார்
இதனையடுத்து இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ள டொனால்ட் லூ, கொழும்பில் உயர்மட்ட அரசியல் தலைமைகள் பலருடனும் சந்திப்புக்களை நடாத்தவுள்ளார்.
இதன்போது இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார்.
இவ்விஜயமானது இந்நாடுகளுடனான அமெரிக்காவின் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதையும், சுதந்திரமானதும், சுபீட்சமானதுமான இந்திய – பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவை வெளிப்படுத்துவதையுமே பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வந்தார் அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலர். உயர்மட்ட அரசியல் தலைமைகளுடம் சந்திப்பு தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளார்அதன்படி இம்மாதம் 10 – 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அவர் இன்றைய தினம் இலங்கைக்கு வந்துள்ளார்இதனையடுத்து இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ள டொனால்ட் லூ, கொழும்பில் உயர்மட்ட அரசியல் தலைமைகள் பலருடனும் சந்திப்புக்களை நடாத்தவுள்ளார். இதன்போது இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார்.இவ்விஜயமானது இந்நாடுகளுடனான அமெரிக்காவின் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதையும், சுதந்திரமானதும், சுபீட்சமானதுமான இந்திய – பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவை வெளிப்படுத்துவதையுமே பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.