• Apr 30 2026

வெனிசுலா மீது அமெரிக்க தலையீடு; இலங்கை கடும் எதிர்ப்பு

Chithra / Jan 5th 2026, 8:25 am
image



ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணான செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில்  விசேட செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது அமெரிக்கா வெனிசுலா மீது முன்னெடுத்த இராணுவ நடவடிக்கை மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்காவிற்கு நாடு கடத்தியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் போது அமைச்சர் இவ்வாறு கூறியிருந்தார்.

அத்துடன், ஒரு நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகள் மற்றும் சர்வதேச சட்டங்களின் படி செயல்படுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 


இதேவேளை  வெனிசுலா விவகாரத்தில் ஜனாதிபதி துணிச்சலான நிலைப்பாட்டை அறிவிப்பார் என தாம் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

அவர் தமது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வெனிசுலா மீதான வொஷிங்டனின் நடவடிக்கைகளுக்குச் 

சந்தேகத்திற்கு இடமின்றி இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எதிர்ப்புத் தெரிவிப்பார்.

ஒரு இறையாண்மையுள்ள நாட்டிற்கு எதிராக அமெரி்க்க ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டுள்ள இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக, அநுர குமார திசாநாயக்க ஒரு துணிச்சலான நிலைப்பாட்டை எடுக்கும்போது, அவருக்கு தமது நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அத்தோடு வெனிசுலாவை ஆக்கிரமிப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கையை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது. இது தொடர்ந்தால், எந்த நாடும் விருப்பப்படி மற்றொரு நாடு மீது படையெடுக்கலாம்," என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஒரு ஊடக சந்திப்பில் கூறினார்.

இருப்பினும், வெனிசுலாவின் உள்நாட்டுப் பிரச்சினைகள் தற்போதைய நெருக்கடிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெனிசுலா தீவிர சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தியிருக்கக்கூடாது," என்று அவர் கூறினார். "மாறாக, கடுமையான சோசலிசத்தை விட சமூக ஜனநாயகத்தை கடைப்பிடிக்கும் சீனா போன்ற நாடுகள் எடுத்த பாதையை அது பின்பற்றியிருக்க வேண்டும்."

நிலையற்ற தன்மை மற்றும் வெளிப்புற தலையீட்டைத் தவிர்க்க சமநிலையான பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் அவசியம் என்று சேனாரத்ன வலியுறுத்தினார்

வெனிசுலா மீது அமெரிக்க தலையீடு; இலங்கை கடும் எதிர்ப்பு ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணான செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.அரச தகவல் திணைக்களத்தில்  விசேட செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.இதன்போது அமெரிக்கா வெனிசுலா மீது முன்னெடுத்த இராணுவ நடவடிக்கை மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்காவிற்கு நாடு கடத்தியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் போது அமைச்சர் இவ்வாறு கூறியிருந்தார்.அத்துடன், ஒரு நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகள் மற்றும் சர்வதேச சட்டங்களின் படி செயல்படுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதேவேளை  வெனிசுலா விவகாரத்தில் ஜனாதிபதி துணிச்சலான நிலைப்பாட்டை அறிவிப்பார் என தாம் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.அவர் தமது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வெனிசுலா மீதான வொஷிங்டனின் நடவடிக்கைகளுக்குச் சந்தேகத்திற்கு இடமின்றி இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எதிர்ப்புத் தெரிவிப்பார்.ஒரு இறையாண்மையுள்ள நாட்டிற்கு எதிராக அமெரி்க்க ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டுள்ள இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக, அநுர குமார திசாநாயக்க ஒரு துணிச்சலான நிலைப்பாட்டை எடுக்கும்போது, அவருக்கு தமது நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு வெனிசுலாவை ஆக்கிரமிப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கையை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது. இது தொடர்ந்தால், எந்த நாடும் விருப்பப்படி மற்றொரு நாடு மீது படையெடுக்கலாம்," என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஒரு ஊடக சந்திப்பில் கூறினார்.இருப்பினும், வெனிசுலாவின் உள்நாட்டுப் பிரச்சினைகள் தற்போதைய நெருக்கடிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.வெனிசுலா தீவிர சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தியிருக்கக்கூடாது," என்று அவர் கூறினார். "மாறாக, கடுமையான சோசலிசத்தை விட சமூக ஜனநாயகத்தை கடைப்பிடிக்கும் சீனா போன்ற நாடுகள் எடுத்த பாதையை அது பின்பற்றியிருக்க வேண்டும்."நிலையற்ற தன்மை மற்றும் வெளிப்புற தலையீட்டைத் தவிர்க்க சமநிலையான பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் அவசியம் என்று சேனாரத்ன வலியுறுத்தினார்

Advertisement

Advertisement

Advertisement