• Sep 20 2024

கொழும்பு மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய அதானியுடன் கைகோர்க்கும் அமெரிக்கா! samugammedia

Tamil nila / Nov 9th 2023, 5:52 pm
image

Advertisement

கொழும்பில் துறைமுகத்தில் கௌதம் அதானியின் முதலீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்டுவரும் மேற்கு முனையத்தில் அமெரிக்கா 553 மில்லியன் டொலர்களை முதலீடு (S$750)செய்யவுள்ளது.

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் (DFC)பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்காட் நதன் கடந்த 7 ஆம் திகதியன்று கொழும்புக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, துறைமுகங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கரண் அதானி மற்றும் அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்காட் நதனுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.

இந்நிலையில், கௌதம் அதானியின் நிதி ஒதுக்கீட்டில் கொழும்பில் அமைந்துவரும் துறைமுக முனையத்திற்கு அமெரிக்கா முதலீடு செய்யவுள்ளது.

தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கைக் குறைக்க இந்தியாவும், அமெரிக்காவும் முயன்றுவரும் நிலையிலேயே இலங்கையில் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா முதலீடுகளை செய்யவுள்ளது.

ஆசியாவிலே மிகப்பெரிய உள்ளக முதலீட்டிற்கு அமெரிக்க நிறுவனமாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் முதலீடு செய்கின்றமை இதுவே முதல்முறையாகும்.

அது இலங்கையின் பொருளியல் வளர்ச்சியையும், இந்தியா உட்பட அதன் வட்டாரப் பொருளியல் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தும் என்று டிஎஃப்சி அதன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகம் இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரிய பரபரப்பளவை கொண்டுள்ளது. அது, அனைத்துலகக் கப்பல் பயணப் பாதைகளுக்கு அருகில் இருப்பதே அதற்குக் காரணம்.

மன்னாரில் காற்றாளைகளை அமைக்கும் திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தாக அண்மையில் சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய அதானியுடன் கைகோர்க்கும் அமெரிக்கா samugammedia கொழும்பில் துறைமுகத்தில் கௌதம் அதானியின் முதலீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்டுவரும் மேற்கு முனையத்தில் அமெரிக்கா 553 மில்லியன் டொலர்களை முதலீடு (S$750)செய்யவுள்ளது.அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் (DFC)பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்காட் நதன் கடந்த 7 ஆம் திகதியன்று கொழும்புக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.இதன்போது, துறைமுகங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கரண் அதானி மற்றும் அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்காட் நதனுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.இந்நிலையில், கௌதம் அதானியின் நிதி ஒதுக்கீட்டில் கொழும்பில் அமைந்துவரும் துறைமுக முனையத்திற்கு அமெரிக்கா முதலீடு செய்யவுள்ளது.தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கைக் குறைக்க இந்தியாவும், அமெரிக்காவும் முயன்றுவரும் நிலையிலேயே இலங்கையில் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா முதலீடுகளை செய்யவுள்ளது.ஆசியாவிலே மிகப்பெரிய உள்ளக முதலீட்டிற்கு அமெரிக்க நிறுவனமாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் முதலீடு செய்கின்றமை இதுவே முதல்முறையாகும்.அது இலங்கையின் பொருளியல் வளர்ச்சியையும், இந்தியா உட்பட அதன் வட்டாரப் பொருளியல் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தும் என்று டிஎஃப்சி அதன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.கொழும்பு துறைமுகம் இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரிய பரபரப்பளவை கொண்டுள்ளது. அது, அனைத்துலகக் கப்பல் பயணப் பாதைகளுக்கு அருகில் இருப்பதே அதற்குக் காரணம்.மன்னாரில் காற்றாளைகளை அமைக்கும் திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தாக அண்மையில் சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement