• Apr 13 2025

அமெரிக்க வரி விவகாரம்: எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி?

Sharmi / Apr 9th 2025, 2:12 pm
image

அமெரிக்க வரி விவகாரம் மற்றும் இலங்கை மீதான அதன் தாக்கம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி மாநாட்டிற்கு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நாளை கூட்டத்தை கூட்டியுள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதியிடம் விவாதம் நடத்த வலியுறுத்தி விடுத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சந்திப்பு குறித்து ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வரி விவகாரம்: எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி அமெரிக்க வரி விவகாரம் மற்றும் இலங்கை மீதான அதன் தாக்கம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி மாநாட்டிற்கு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் நாளை கூட்டத்தை கூட்டியுள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதியிடம் விவாதம் நடத்த வலியுறுத்தி விடுத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இருப்பினும், சந்திப்பு குறித்து ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement