• Apr 13 2025

கிளிநொச்சியில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகம் திறந்துவைப்பு..!

Sharmi / Apr 9th 2025, 2:25 pm
image

கிளிநொச்சியில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அடுத்த ஐந்தாண்டுக்கான 2025-2029 தேசிய ஊழல் எதிர்ப்புசெயற்றிட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்ற தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைய மாவட்ட செயலகங்களில் உள்விவகார பிரிவுகளை ஆரம்பித்தல் தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கமைய கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மேலதிக மாவட்ட செயலாளர்(காணி) நளாயினி இன்பராஜ் தலைமையில் குறித்த அலுவலகம் மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் தேசிய நிகழ்வினை உத்தியோகத்தர்கள் நேரலையாக பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


கிளிநொச்சியில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகம் திறந்துவைப்பு. கிளிநொச்சியில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அடுத்த ஐந்தாண்டுக்கான 2025-2029 தேசிய ஊழல் எதிர்ப்புசெயற்றிட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்ற தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைய மாவட்ட செயலகங்களில் உள்விவகார பிரிவுகளை ஆரம்பித்தல் தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கமைய கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.கிளிநொச்சி மேலதிக மாவட்ட செயலாளர்(காணி) நளாயினி இன்பராஜ் தலைமையில் குறித்த அலுவலகம் மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் தேசிய நிகழ்வினை உத்தியோகத்தர்கள் நேரலையாக பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement