• Dec 25 2024

நாடளாவிய ரீதியில் மருந்தாளர்களுக்கு வெற்றிடம்!

Chithra / Dec 24th 2024, 2:24 pm
image

 

நாட்டில் மருந்தாளர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் கொழும்பு மாவட்டத் தலைவர் ஹேமந்த விஜேசேகர இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். 

நாடளாவிய ரீதியில் சட்ட ரீதியாக மருந்தகங்களை முன்கொண்டு நடத்துவதற்கு பாரியளவில் மருந்தாளர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்றது. 

அந்த நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில் கூடிய விரைவில் மருந்தாளர்களை உள்ளீர்ப்பதற்கான செயற்றிட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. 

இதன் காரணமாகவே அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம். 

அத்துடன், குறித்த துறையுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றோம்.

எதிர்காலத்தில் உரிய முறையில் மருந்தகங்களை நடத்துவதற்கான இயலுமை ஏற்படுத்தப்படுமென கருதுகின்றோம். 

இந்தநிலையில் உரிய பயிற்சியுடன் கூடிய மருந்தாளர்களை உள்ளீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் கொழும்பு மாவட்டத் தலைவர் ஹேமந்த விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் மருந்தாளர்களுக்கு வெற்றிடம்  நாட்டில் மருந்தாளர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் கொழும்பு மாவட்டத் தலைவர் ஹேமந்த விஜேசேகர இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் சட்ட ரீதியாக மருந்தகங்களை முன்கொண்டு நடத்துவதற்கு பாரியளவில் மருந்தாளர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்றது. அந்த நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில் கூடிய விரைவில் மருந்தாளர்களை உள்ளீர்ப்பதற்கான செயற்றிட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதன் காரணமாகவே அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம். அத்துடன், குறித்த துறையுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றோம்.எதிர்காலத்தில் உரிய முறையில் மருந்தகங்களை நடத்துவதற்கான இயலுமை ஏற்படுத்தப்படுமென கருதுகின்றோம். இந்தநிலையில் உரிய பயிற்சியுடன் கூடிய மருந்தாளர்களை உள்ளீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் கொழும்பு மாவட்டத் தலைவர் ஹேமந்த விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement